பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 59

மனிதர்கள் இருந்தவாறு இருக்கும் வாறு- என்னே என்னே!

நீங்கள் பெங்களுரில் தென்பிராந்திய அலுவலகத்துக்கு வந்து செயல்புரிந்து கொண்டிருக்கிறீர்களோ என்னவோ! நான் துங்கி முழிச்சு புதுடில்லிக்குக் கடிதம் எழுதுகிறேன். கடிதம் எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்.

அன்பு

N. ජී.

பாரதிசங்கர்

சென்னை-14. 3-12-8s

பிரிய பாரதிசங்கர்,

வணக்கம். உங்கள் 25-11-85 கடிதம். கிடைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இன்றுதான் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.

உங்கள் வாழ்க்கை மாற்றங்களையும் சூழ்நிலை பற்றியும் விரிவாக எழுதியதற்கு நன்றி. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எப்படி எப்படியோ அமைந்துவிடுகிறது. எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் திட்டங்களுக்கும் குறை இருப்பதில்லை.

ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அபூர்வமாக ஒரு சிலருக்கு, எண்ணியவற்றை எண்ணியவாறு செய்து முடிக்க வாய்ப்புகளும் வசதிகளும் கிட்டுகின்றன. பலருக்கு அவை கிடைப்பதில்லை.

திறமையும், உழைப்பும், திட்டமும் லட்சியக் கனவுகளும், செயல் ஊக்கமும் மட்டும் இருந்தால் போதாது. இவை உரியமுறையில் பலன் அளிப்பதற்கு பணபலமும், சக, காலத்தின் துணையும் கட்டாயம் வேண்டும். இவை கிடைப்பது தான் சிரமமாகி விடுகிறது, வாழ்க்கையில், தற்கால சமூக அமைப்பில்,

அதற்காக மனம் சோர்ந்து போகவேண்டியதில்லை. உற்சாகமாக உழைத்துக்கொண்டிருப்பதில் ஒரு சந்தோஷம் உண்டு.

நீங்கள் சந்தோஷமாக, இஷ்டப்படி இஷ்டப்பட்டதை செய்துகொண்டு, காலம் கழித்து வருவதை அறிய மகிழ்ச்சி.

நான் பிப்ரவரி 7ல் ராஜவல்லிபுரத்திவிருந்து சென்னை வந்தேன். அதன் பிறகு அங்கே போகவில்லை. ஆகஸ்டு முதல், இந்த மாதம்