பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வல்லிக்கண்ணன்

போகலாம்-அடுத்த மாதம் போகலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டபடி இருக்கிறேன். பொங்கலுக்குப் பிறகு தான் இனிமேல் போகவேண்டும்.

நண்பர் இராமகிருஷ்ணன் வழக்கம் போல் உற்சாகமாகத் தான் இருப்பார். அவருக்கு மூன்று கடிதங்கள் எழுதினேன். அவர் பதில் எழுதுவதில்லை, கடிதங்களுக்கு.

22-12-85ல் அவர் மகள் லதாவுக்கு பூப்புனித நன்னிராட்டு விழா என்று தடபுடலாக அச்சிடப்பட்டிருந்த அழைப்பு இதழ் வந்தது. விசேஷம் மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கும என்பதில் சந்தேகம் இல்லை. ராஜவல்லிபுரத்திலிருந்தோ, திருநெல்வேலியிலிருந்தோ கடிதம் எதுவும் வருவதில்லை. எழுதுவதற்கு யாரும் இல்லை. - நவம்பர் 28-ம் தேதி புதுக்கோட்டை போனேன். 29,30களில் "எழுத்தாளர் உறவுக்கூட்டம்' என்றொரு நிகழ்ச்சி. அங்கிருந்து அறந்தாங்கி போய் ஒரு வாரம் போக்கினேன். ஆவுடையார்கோவில், சித்தன்னவாசல் போய் சிற்பங்கள், குகைக்கோயில் பார்க்கும் வாய்ப்பு சிட்டியது.

1985 போகிறது. காலம் ஒடுகிறது. ஒடிக்கொண்டேயிருக்கிறது. வயது அதிகரிக்கிறது. பல்விளித்துக்கொண்டு பதுங்கி பதுங்கி வரும் சாவின் காலடி ஓசை மெதுமெதுவாகக் கேட்கத் தொடங்குகிறது. யோசிக்கும்போது, வாழ்க்கை அர்த்தமற்றதாகவே படுகிறது. அவரவர் அவரவரது இயல்புகள், சூழல்கள், வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்றபடி சந்தோஷமாக நாட்களை கழிக்க முடிந்தாலே போதும் தான். இன்றைய உலகத்தில் அதுவே பெரிய காரியம் தானே.

நலம். நாடுவதும் அதுவே. புதுவருஷ வாழ்த்துக்கள்.

அன்பு ఉJ. &.

கவிப்பிள்ளை ந.சு. காந்திமதிநாதன்

சென்னை. たア-77-99

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்.

அக்டோபர் மாத இறுதியோடு வியாபாரத்தை முடித்துவிட நேரும் என எழுதியிருந்தபடியால், உங்களிடமிருந்து கடிதம் வந்த