பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 71

பிறகு எழுதலாம் என்றிருந்தேன். உங்கள் 13ம் தேதிக் கடிதம் 15ல் கிடைத்தது. வாழ்க்கையில் பெரும்பகுதிக்காலம் ஈடுபட்டிருந்த ஒரு தொழில், பழகிவிட்ட ஒரு வாழ்வுமுறை, கடைசிக் கட்டத்தில் மாறிப்போவது என்பது மனசுக்கு கஷ்டம் அளிக்கும் காரியம் தான். என்றாலும், காலத்தின் கட்டாயத்தை யாரும் தவிர்த்து விட இயலாது. அவ்வப்போது வருவதை எதிர் ஏற்று, நம்மால் முடிந்ததை, நமது ஆற்றலுக்கும் சக்தி க்கும் ஏற்ப செய்து கொண்டே இருக்கவேண்டியதுதான். எவருக்கும் கேடு நினையாமல், நம் மனசுக்கு சரி என்று பட்டதை நாம் செய்துவருவது நமக்கு ஒரு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அதிலும் சோதனைகள் வரக்கூடும் தான். அவற்றை தாங்கிக்கொள்ள வேண்டும். -

அன்பு

$, శ్రీ.

சென்னை. 3–72-90

அருமை நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். 22-11-90 கடிதத்தில் உங்கள் வாழ்க்கைக்குறிப்பை எழுதி அனுப்பியதுக்காக நன்றி. மருமகப் பிள்ளையின் வாழ்த்தும் படித்தேன். சந்தோஷம். ஒய்வு நிறைய இருக்கும். பழைய, புதிய, புத்தகங்களைப் படித்துச் சுவைத்து மகிழலாம். மனசுக்குப் பிடித்த காரியம். கடிதங்கள் எழுதுவதும் திருப்தி தரும். நான் நலம். அண்ணா, அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் சுகம் அடிக்கடி மழை பெய்கிறது. அதனால் ரோடுகள், சுற்றுச்சூழல், எல்லாம் அசிங்கமாகின்றன. திருநெல்வேலியில் மழை பெய்கிறதா? எனது நாட்கள் வழக்கம் போல் ஒடுகின்றன. நவம்பர் 12 முதல் எனக்கு 71 வயது ஆரம்பம். என் இஷ்டம் போல், நினைத்ததை செய்துகொண்டு, விருப்பம்போல் படித்தும் எழுதியும் ஊர்சுற்றியும் வாழ முடிந்ததுக்காக மகிழ்கிறேன். எஞ்சியிருக்கும் சிறிது காலமும் இப்படியே ஒடிப்போகும். மனதிருப்தி தான் முக்கியம். பேராசைகள் வளர்த்து, கவலைப்பட்டு, நாளோட்டுவது நல்லது செய்யாது.

அன்பு

Głf. &s