பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வல்லிக்கண்ணன்

சென்னை. 27-6-97

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் 21ம் தேதிக் கடிதத்துக்கு நன்றி. இந்தியா டுடே'யில் வந்த எனது பேரிழப்பு கதையைப் படித்து ரசித்து பலபேர் பாராட்டி எனக்கு கடிதங்கள் எழுதியிருந்தார்கள். கடந்துபோன இனிய நாட்கள் என்றும் மனோகரமானவை தான். இளம் பருவ அனுபவங்கள்-சூழல்கள் என்றும் பசுமையான தடங்களாக மனசில் பதிந்து கிடப்பது இயல்பு. அவற்றை வெகு காலத்துக்குப் பிறகு, அப்படி அப்படியே கண்டுவிடலாம் என்று ஆசைப்பட்டு, தேடிப்போனால் ஏமாற்றம் தான் கிட்டும். காலம் மாற்றங்களைச் செய்தபடி ஒடுகிறது. இடங்களும், மனித மதிப்புகளும், வாழ்க்கை நிலைகளும் வெகுவாக மாறித்தான் போகின்றன. உங்கள் கண் பார்வை இழப்பும், அதனால் நீங்கள் அனுபவிக்கிற மனவேதனையும், அனுபவக் கஷ்டங்களும் வருத்தம் தருகின்றன. உங்கள் உள்ளத்தின் நம்பிக்கை பலன் அளித்து ஒளி கிட்டுமாயின் அது பெரும் நற்பேறு ஆகவே அமையும். திருவருள் பாலிக்கட்டும்.

அன்பு

3) !. 35.

சென்னை. 72-9–92

அருமை நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் 7ம் தேதிக்கடிதம் மூலம் உள்ள நிலைமை அறிந்தேன். வருத்தமாகத் தான் இருக்கிறது. வருவதை ஏற்று, தாங்கிக்கொள்கிற சக்தி மனசுக்கு வேண்டும். அதற்கு பக்தி உதவுகிறது. தெய்வ நம்பிக்கை தெம்பு தரும், தன்னம்பிக்கை வலிமையூட்டும். பிறந்தநாள்-வயது பற்றி அறிந்தேன். சந்தோஷம். 68 ஆண்டுகள் நிறைவுற்றது பெரிய விஷயம்தான். ஒடுகிற காலம் அனுபவங்களைத் தருகிறது. அனுபவங்களினால் துக்கமும் சந்தோஷங்களும் கலந்தோ, மாறிமாறியோ கிடைக்கின்றன. அனுபவங்கள் ஒரு சிலருக்கே ஞானம்