பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 73

புகட்டுகிறது. ஞானத்தை, ஆனந்தத்தை, உள அமைதியைப் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள். வாழ்த்துகிறேன். வாழ்க வாழ்க

அன்பு

←af. &.

சென்னை.

14-5-97

அன்பு மிக்க நண்பர், வணக்கம்.

உங்கள் 8-5-91 கடிதம் மூலம் உங்கள் உடல்நிலை பற்றி தெரிந்துகொண்டேன். உடல்நலம் கூடிவருகிறது என்ற செய்தி சந்தோஷம் தருகிறது. சுபமங்களாவில் வந்த எனது கதையை ரசித்து எழுதியிருப்பதற்காக நன்றி. இண்டியா டுடே'யில் என் கதை ஒன்று வர இருக்கிறது. அதுவேறு மாதிரிக் கதை. சோவியத் நாடு ஏப்ரல் இதழில் உதவாக்கரை என்ற கதை வந்தது. அது தனிரகமானது. வாழ்க்கையில் இறப்புகளும் இழப்புகளும் தவிர்க்கமுடியாதவை. அவற்றால் துயரம் எழுவதும் இயல்பு. அத்துயரமே பெரும் சுமையாய் என்றும் அழுத்திக்கொண்டிருக்கும்படி விடுவது சரியல்ல. வாழ்க்கை சகஜ நியதியில் முன்சென்று கொண்டிருக்கவேண்டும். இங்கு அண்ணியும், பிள்ளைகளும் இயல்பான அலுவல்களில் தங்கள் பேரிழப்பை தாங்கிக் கொள்ளப் பழகிவிட்டார்கள். எல்லோரும் நலம்.

அன்பு

డ, శ్రీ.

அ. பசுபதி

சென்னை,

j6-11-97

அன்பு மிக்க பசுபதி, வணக்கம் பிறந்தநாள் வாழ்த்து கிடைத்தது. நன்றி. மகிழ்ச்சி. நீங்களும் துணைவியும் வேங்கை, மங்கை இருவரும் நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் சுகம்.