பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

7

4.

12ம்தேதி மயிலை சீனிவாச சாஸ்திரி ஹாலில் எனது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று எனது புத்தகங்கள் மூன்று வெளியிடப்பட்டன. நிதி வழங்கப்பட்டது. -

தமிழகம் நெடுகிலும் உள்ள எழுத்தாளர்களும் இலக்கிய அபிமானிகளும் அன்டோடும் அனுதாபத்துடனும் மனமுவந்து நிதி வழங்கியிருக்கிறார்கள். எதிர்பாராதபடி ரூபாய் இருபத்தைந்தாயிரம் சேர்த்துவிட்டது.

ஐந்தினைப் பதிப்பம் வெளியீடான தமிழில் சிறுபத்திரிகைகள் டிம்மி அளவு 340 பக்கங்கள் விலை ரூ. 55/- வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமான விலை என்றே படுகிறது. CLS வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை அதிகம் என்றே தோன்றுகிறது. குறுநாவல்கள் தொகுப்பு 'மன்னிக்கத் தெரியாதவர்'-ரூ. 30. சிறுகதைகள் - 'அருமையான துணை-ரூ. 25. (முன்பு CLS பிரசுரித்துள்ள எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன்-ரூ. 45/- என்பதம் அதிகம்தான்.)

13-ம் தேதி முதல் பெரும் மழை தான். சென்னையை விட புதுச்சேரியிலும் காரைக்காவிலும் மழையும் அதன் பாதிப்புகளும் வெகு அதிகம் என்று செய்திகள் மூலம் தெரிய வருகிறது. அங்கு புயலின் வேகமும் சேர்ந்திருந்தது அல்லவா?

அக்டோபர் 24 முதல் நவம்பர் 5முடிய நான் சென்னையில் இல்லாதிருந்தேன். 25ம் தேதி சிவகாசி சேர்ந்தேன். 27ல் அங்கு ஒரு புத்தக வெளியீட்டு விழா. இ. எஸ். தேவசிகாமணி என்பவர் :ன்னாளைய My Magazine என்ற பத்திரிகையில் எழுதிய ஆங்கிலக் கதைகளின் தொகுப்பு. Unexpected Guests, 29ம் தேதி திருநெல்வேலி போனேன். தி.க.சியுடன் ஒருவாரம் தங்கினேன். திருநெல்வேலி நண்பர்களை சந்தித்தேன். ஒருநாள் ராஜவல்லிபுரம் போய்வத்தேன். நவம்பர் 5 இரவில் நெல்லை எக்ஸ்பிரசில் பயணம்

'சய்து, காலை சென்னை சேர்ந்தேன்.

{{#.

,..معي

•ów

தி.க.சி. விழாவுக்காக 7-ம் தேதி சென்னை வந்தார்.

பத்திரிகைகள் உலகம் வழக்கம்போல் தான் இருக்கிறது. புதுமை எதுவும் இல்லை1991லும் மாதங்கள் போய்விட்டன. டிசம்பரும் வேகமாக ஓடிவிடும்!

அன்பு

á. .