பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 77

ஏமாற்றுவோர் அதிகமாக உள்ள சூழ்நிலையில் எவரும் ஏமாந்துபோகாமல் இருக்க முடியாது ஏமாற்றங்களும் அனுபவங்களே. அனுபவங்கள் அறிவு விழிப்பு ஏற்படுத்துவனவாக இருக்கவேண்டும் பொதுவாக மக்கள் அனுபவங்கள் மூலம் ஞானம் பெற்று விடுவதில்லை. அதனாலேயே ஏமாற்றுக்காரர்கள் வெற்றி வாழ்வு, வாழ்கிறார்கள். பலரை சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றமுடியாது என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். ஆனாலும், பாருங்கள். வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சில சில பேரை ஏமாற்றுவதன் மூலம், ஏமாற்று வித்தகர்கள் தங்கள் எல்லாக்காலத்தையும் கோலாகலமாகக் கழிக்கமுடிகிறது. இதுயுக தர்மம்-இன்றைய உலக நியதி. எழு-விழி-உணர்-ஒளிர் என்றார் விவேகானந்தர். விழிப்புற்றிருக்கவேண்டும்.

அன்பு

. يقي . وية

சென்னை,

23-アー95 அன்பு மிக்க நண்பர்,

வணக்கம். ஒரு மாத காலம் நான் சென்னையில் இல்லை. உடுமலைப்பேட்டையில் 4 நாட்கள்; பிறகு, திருநெல்வேலியில், தி.க.சியுடன் தங்கியிருந்தேன். புதிய புத்தகங்கள் படிப்பது, பலப்பல நண்பர்களோடும் பேசி மகிழ்வது என்று நாட்கள் இனிது போயின. அங்கிருந்து 20-ம் தேதி நெல்லை எக்ஸ்பிரசில் பயணம் செய்து 2: காலை இங்கு வந்து சேர்ந்தேன். நலமாக இருக்கிறேன். நீங்களும் நலம்தானே? திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பருடன், ஒருநாள், உவரி என்ற இடம் போய் வந்தேன். கடலோரச் சிற்றுார். முதன்முதலி ல் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட மீனவ மக்கள் வசிக்கிற ஊர்களில் அதுவும் ஒன்று. கால்டுவெல் தொழில் புரிந்த இடையன் குடியும் அருகில்தான் இருக்கிறது. கடல் ஒரு அற்புதம் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுப்புத் தராத ஒரு அதிசயம். உவரியில் கடலை ஒட்டி அந்தோனியார் கோயில் என்ற பெரிய சர்ச் இருக்கிறது. வேறு 2 சர்ச்சுகளும் உண்டு. நலம்தானே?