பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 79

நன்றி. 15ம் தேதி நான் நெய்வேலி போனேன். வேர்கள் இலக்கிய சங்கம் மு. ராமலிங்கம் நெடுநாளைய நண்பர். முன்பு, இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை போய் சில நாட்கள் அவர் வீட்டில் தங்கி வருவேன். இடையில் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன, போய் வந்தபிறகு இம்முறை அவசியம் போவது என்று தீர்மானம். நண்பர்கள் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தினார்கள். தேவதாஸ் என்ற நண்பர் 15 இந்திய மொழிச் சிறுகதைகளை தமிழாக்கினார், நெய்வேலி நண்பர் ஒருவர் அவற்றை புன்னகை புரியும் இளவரசி என்று புத்தகமாக்கினார். 16ம் தேதி அதன் வெளியீட்டு விழா. ஒரு அன்பர் வந்து என்னை அழைத்துப்போனார். விழா நன்கு நடந்தது. 1617 தேதிகளில் நெய்வேலியில் தங்கினேன்.-18ல் சென்னை வந்து சேர்ந்தேன்.

நலமாக இருக்கிறேன். அண்ணியும் பிள்ளைகளும் நலம். நீங்களும் குடும்பத்தினரும் நலம்தானே? எதிர்பார்ப்பதுமில்லை; அதனால் ஏமாற்றமும் இல்லை என்பது எதிர்வினா எழுப்பக்கூடியதுதான். எதுதான் எதிர்க்கேள்வி எழுப்பாத ஒன்றாக இருக்கிறது? பார்க்கப் போனால், பகவத் கீதையில் கண்ணன் வலி யுறுத்துவதும் இதே தான், பலனை எதிர்பாராதே, கடமைகளை செய்துகொண்டே இரு என்கிறது. கீதை. இதெல்லாம் மனநிலையை பொறுத்து அமைவதுதான். மனசை அமைதிநிலைக்கு பண்படுத்தும் முயற்சிகள் தான். வாழ்க்கையில் ஏமாற்றங்கள் எதிர்ப்படுவது இயல்பு. ஆனால், இது ஏமாற்றம் இல்லை; இதுவும் ஒரு அனுபவம்தான் என்று ஏற்றுக்கொள்ள மனம் பண்பட்டுவிட்டால், ஏமாற்றம் வலி தராது. . இவ்வளவு எழுதிவிட்டேன்; எனக்கு உரிய கவனிப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் பொறுமலும் பொறாமயும் தான் சில எழுத்தாளர்களை பலரையும் தாக்குகிறவர்களாக மாற்றியிருக்கிறது. எனக்கு ஞானபீடப் பரிசு கிடைக்கவில்லையே என்ற எதிர்பார்ப்பு எவன் எவனுக்கோ அது தரப்படுகிறது என்று கரித்துப் பேசும்படி பலரைத் தூண்டுகிறது. எதிர்பார்ப்பதனால், தானே இந்த மனக் கசப்பு? புத்தகப் பூங்கா'ஆசாமி புத்தகம் போடவில்லை; பணத்தையும் தரவில்லை. இது ஏமாற்றம். போறான் போ: மனித இயல்பு இப்படி இருக்கிறது என்று எண்ணினர்களே அது அனுபவ ஞானம். இப்படி பண்பட்டு வளர்வது மனிதம்.

அன்பு

6. &.