பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வல்லிக்கண்ணன்

ஒருசில எனக்கு படிக்கக் கிடைக்கின்றன. அப்படி கிடைப்பவையே அதிகம் என்று சொல்லப்பட வேண்டிய அளவினதான்.

சென்ற ஒரு மாத காலத்தில் நான் படித்தவை - கி. ராஜநாராயணன் கடிதங்கள். சுவாரஸ்யமான கடிதங்களின் தொகுப்பு. கோணங்கியின் கொல்லனின் ஆறு பெண்மக்கள். புதுமையான முறையில் எழுதப்பட்ட கதைகள், பல கதையில்லா அளப்புகள். கோணங்கியிடம் நல்ல திறமை இருக்கிறது. அழகிய தமிழ் நடையில் எழுதுகிறார். புதுமை பண்ண வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனாலும், என்ன எழுதுவது என்று விளங்கிக் கொள்ளாது என்னென்னவோ எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஆத்மாதாம் கவிதைகள் படித்தேன். “காகித அகலிகைகள் - கருமலைப்பழம்நீ (வசனகவிதைகள்). வீரமணியின் சொற்பொழிவு உத்திகள் - நம். சீனிவாசன். M. Phil ஆய்வு. சங்க இலக்கியம்(அகம்) - சரளா ராசகோபாலன். ஏது பதி, ஏது பெயர்? (சொற்கோலம்)- என். ஆர். தாசன். 'அழுக்கு (சமூக நாவல்) - ராஜம் கிருஷ்ணன். இயற்கைச் சூழலில் படிந்து வரும் அழுக்கை அகற்ற ஏற்பட்டுள்ள மத்திய அரசு அமைச்சுப் பிரிவிலேயே, அழுக்கு நிறைந்துள்ளது ஆறு, நகரம், சுற்றுப்புறச் சூழலில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் செயல்களிலும் அழுக்கு மண்டி வளர்கிறது - இது நாவலின் மையக் கருத்து. லா. ச. ரா.வின் புத்ர (நாவல்); கங்கா (சிறுகதைகள்). எனக்குள் இருப்பவள் பிரபஞ்சன் (குறுநாவல்கள் 2); அனுக்கிரகா - நா.பா. (நாவல்). மண்ணை மீறிய விதைகள்-வேலாராமமூர்த்தி, சிறுகதைகள்.

அன்பு

$J. తి.

சென்னை.

S-アー97 அன்பு மிக்க இராமலிங்கம், வணக்கம். நீங்கள் அன்புடன் அனுப்பிவைத்த கல்குதிரை - தாஸ்தாயேவ்ஸ்கி சிறப்பிதழ் (ரிக்கார்டு டெலிவரியில்) 1-ம் தேதி கிடைத்தது. நன்றி. மிக்க மகிழ்ச்சி. வெகு சிரத்தையோடும் சிறப்புக்கவும் இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதானமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும் எழுதுவேன். தமிழ் வாசகர்களுக்கு இலக்கியப் பிரியர்களில் பெரும்பாலோருக்குக் கூட) தாஸ்தாயேவ்ஸ்கி அறிமுகமானவர் அல்லர். இந்தப் புத்தகம் அவரைப்