பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 87

நடந்ததாக அளக்கப்படுகிற சம்பவங்கள் அங்கே கண்டு பழகிய மனிதர்கள் பல நாட்டு எழுத்தாளர்கள்- கவிஞர்கள் - பற்றி சொல்கிற புத்தகம். ஒவ்வொரு பகுதியும் ஒரு தனிச் சிறுகதை மாதிரி. இதில் ஒற்றன் எவனும் வரவில்லை. ஒற்று வேலையும் கிடையாது. ஆப்பிரிக்க நாட்டு எழுத்தாளன் ஒருவன் ஒற்றன் என்றொரு நாவல் எழுதியிருக்கிறான் என்ற தகவல்-அதை இவர் இன்னும் படிக்கவில்லை என்ற வரி வருகிறது. அதை வைத்துத்தான் தலைப்பு ஒற்றன்.

நீங்களும் குடும்பத்தினரும் நண்பர்களும் தலம் தானே?

அன்பு ఙi. 5.

சென்னை.

16-7-92

அன்பு மிக்க இராமலிங்கம்,

வணக்கம். நலம்.

நீங்களும் மனைவியும் ஜீவபாரதியும் நலம் தானே?

நேற்று பொங்கல் திருநாளை சந்தோஷமாகக் கொண்டாடியிருப்பீர்களென எண்ணுகிறேன்.

அண்ணியும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள். சமீப நாட்களில் எனக்கு பப்ளிசிட்டி அதிகம்!

ஜனவரி 4ல் புக்ஃபேர் துவங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம், துவக்க விழாவில் என்னை கவுரவித்தது. பாராட்டிதழ் வழங்கி, 200/-க்கு செக்கும் தந்தது.

இந்நிகழ்ச்சிக்கு முன்பே தினமணி டிசம்பர் 31ம் தேதி இதழில் இது பற்றி செய்தி எடுப்பாகப் பிரசுரமாயிற்று. நிகழ்ச்சி பற்றிய செய்தி பத்திரிகைகள், டிவி, வானொலியில் இடம் பெற்றது. அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கான ஒய்வு ஊதியத்துக்கு நானும் தெரிவு செய்யப் பட்டிருக்கிறேன். அரசு மாதம் ரூ. 400/- வழங்கும். இது பற்றிய செய்தியும் பல பத்திரிகைகளிலும் வந்தது. இதற்கான விழா இன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நிகழும்.

'கல்குதிரை-9 கிடைத்தது. நன்றி. இந்த இதழ் நகுலன் சிறப்பிதழாக விளங்குகிறது. சந்தோஷம். நகுலன்பேட்டி, அவரது குறிப்புகள், எம்டிஎம் விமர்சனம் எல்லாம் அருமை. நகுலன்