பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 வல்லிக்கண்ணன்

சம்பந்தமான கோணங்கி கற்பனைச் சித்திரமும், எபில்வியா கதையும் Post Modern Writing பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன. சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன. இதர விஷயங்களும் நன்று.

குறிஞ்சிப்பாடி மணியன் பதிப்பகம் நண்பர், 'வல்லிக்கண்ணன் கதைகள் தொகுப்பை பொன்விஜயன் 'புதிய நம்பிக்கை') பிரஸ்பிைல் தான் அச்சிடுகிறார். இம்மாத இறுதியில் புத்தகம் தயாராகிவிடும் என்றார். நண்பர் குறிஞ்சிவேலனும் இது பற்றி கடிதம் எழுதியிருந்தார், திரு. சம்பந்தன் முன்பணமாக ரூ. 700/- தந்தார்.

நண்பர் தி.க.சி. இம்மாதம் 3ம் தேதி கடும் மார்புவலியால் பாதிக்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். Mild Attack தான். இனி மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.

தோப்பில் முகம்மது மீரான் தனது இரண்டாவது நாவல் 'துறைமுகம் புத்தகத்தை வெளியிட்டு விட்டார். நாவல் நன்றாக இருக்கிறது.

சுபமங்களாவில் வண்ணநிலவன் நேர்காணல் படித்திருப்பீர்கள். ரொம்ப விரக்தி நிலையில் இருக்கிறார் நண்பர்.

வாழ்த்துக்கள்.

அன்பு

சென்னை.

29-1-92

அன்பு மிக்க இராமலிங்கம்,

வணக்கம்.

உங்கள் 21-1-92 கடிதம் கண்டேன்.

'கல்குதிரை 9-ல், காலச்சுவடு மலர் வெளியிடுவதற்காக சுந்தரராமசாமியை வீணாகச் சாடியிருக்கிறாரே, இது தேவையற்றது என்று எண்ணினேன். தி.க.சியும் இது வேண்டாத வேலை என்று எழுதியிருந்தார். நீங்கள் குறிப்பிடுவது போல, சிறு பத்திரிகைக்காரர்கள் இப்படிப்பட்ட போட்டி உணர்வுகள்,