பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் §§

தாக்குதல்கள், வ ைச பாடல்களை வளர்த்துக்கொண்டு அவதிப்படுகிறார்கள். தாங்களும் வளராமல் போகிறார்கள்.

21-ம் தேதி சென்னையில் கமல்ஹாசன் நற்பணி மன்றம் ஆண்டு விழா நடைபெற்றது. அச்சமயம் கமல்ஹாசன் அவரது தாயாரின் நினைவாக 'அன்னை ராஜலட்சுமி நினைவுப் பரிசு என்று - இலக்கியவாதிக்கு என்று, எனக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் அளித்தார். கி. ராஜநாராயணனை கெளரவித்தல் என்று அவருக்கும் ஒரு செக் வழங்கப்பட்டது. அந்த விழாவுக்கு அவர் வரவில்லை.

மணியன் பதிப்பகம் நண்பர் சம்பந்தன் அதன் பிறகும் வந்தார். ஜனவரி 31க்குள் புத்தகம் தயாராகிவிடும் என்றார். பிப்ரவரி முதல் வாரம் வருவதாகச் சொல்லிப் போனார். *

தோப்பில் முகம்மது மீரானின் இரண்டாவது நாவல் துறைமுகம் வந்துவிட்டது. இந்த நாவலையும் அவர் நன்றாகவே எழுதியிருக்கிறார்.

மா. அரங்கநாதன் நாவல் பறளியாற்று மாந்தர் வந்தவிட்டது. அவருடைய சிறுகதைகள் ஞானக்கூத்து தொகுப்பும். இரண்டும் அழகாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

'பறளியாற்று மாந்தர் நாவலை வித்தியாசமான முறையில் எழுதவேண்டும் என்ற அரங்கநாதன் முயன்றிருக்கிறார். சுமார் ரகமான படைப்பு தான்.

க்ரியா தயாரித்துள்ள தமிழ் அகராதி உயர்ந்த முறையில் அமைந்துள்ளது. பயனுள்ள அகராதிதான். புக் ஃபேர் போது புரட்டிப் பார்த்தேன்.

கி. ராஜநாராயணன் தாய் பத்திரிகையில் எழுதி வருகிற அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் அவரது பெயரைக் கெடுக்கின்றன. பலரும் அவரை குறைகூறுவது இயல்பாகிவிட்டது. அவர் வேண்டுமென்றே, உற்சாகத்தோடு, இந்த ரகக் கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.

நான் நலம். அண்ணியும் பிள்ளைகளும் சுகம், நீங்களும் வீட்டில் அனைவரும் நலம் தானே?

அன்பு

}ெ. கி.