பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Qū வல்லிக்கண்ணன்

சென்னை.

29-2-92 அன்பு மிக்க இராமலிங்கம், வணக்கம். நலம். நீங்களும் வீட்டில் அனைவரும் நலம் தானே? இதற்குள் வல்லிக்கண்ணன் கதைகள் புத்தகம் குறிஞ்சிப்பாடி சம்பந்தனிடமிருந்து - அல்லது, குறிஞ்சிவேலன் வழியாக - பெற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நண்பர் 20-ம் தேதிக்குள் புத்தகத்தை தயாரித்து முடித்துவிட்டார். குறிஞ்சிவேலன் புத்தகம் ஒன்றும் (மலையாற்றுார் நாவல் மொழிபெயர்ப்பு) வேறு சில புத்தகங்களும் வெளியிட் டிருக்கிறார் அவர் எனக்கு வ.க. கதைகள் மட்டும் 10 பிரதிகள் தந்தார்.

புத்தகம் அச்சும் அமைப்பும் அழகாக அமைந்துள்ளன. 20 கதைகள், 23 பக்கங்கள். 30 ரூ. விலை.

நீங்கள் தஸ்தயேவ்ஸ்கி நாவல் வெளியீட்டு வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

'காவச்சுவடு சிறப்பு மலர் நண்பர் சுந்தர ராமசாமி அனுப்பியிருந்தார். பார்ப்பதற்கு மிக வசீகரமாக இருக்கிறது. படித்து முடித்தேன். நல்ல தயாரிப்பு தான். கனமான கட்டுரைகள், நல்ல கவிதைகள், கதைகள், புத்தக மதிப்புரைகள் என்று பயனுள்ள விஷயங்கள். அப்படிச் செய்திருக்கலாம், இதைச் சேர்த்திருக்கலாமே என்ற தன்மையில் யோசனைகளும் விமர்சனங்களும் சொல்லலாம் தான். சொல்கிறார்கள். செய்யப்பட்டிருப்பது பற்றி அபிப்பிராயம் சொல்வது தான் சரி; மற்றபடி ஆலோசனைகள், கூறிக்கொண்டிருப்பது வேண்டாத வேலையே என்பதுதான் என் எண்ணம். மலர், சு.ரா. எதிர்பார்த்தபடி வரவேற்பும் விற்பனையும் பெறவில்லை என்று தோன்றுகிறது. விலை 100 ரூபாய் என்றிருந்ததை ரூ. 80/- ஆக்கினார். வாசகர்களுக்கு 15% கழிவு தரலாம்: ரூ. 68 அனுப்பினால் 'காலச்சுவடு செலவிலேயே மலர் வாங்கக்கூடிய நண்பர்கள் முகவரி சில தெரிவியுங்கள் என்று கரா. எனக்கு எழுதியிருக்கிறார்.

புத்தகங்கள், பத்திரிகைகள், விசேஷமலர்கள் வெளியிடுவது என்பது கையைக் கடிக்கிற காரியமாகவே இருக்கிறது தமிழ் நாட்டில், பிசினஸ் ரீதியாக புத்தகங்கள் வெளியிடுவோர் தொடர்ந்து ஏ கப்பட்ட புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அன்பு

శ!, 4.