பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வல்லிக்கண்ணன்

நாவலை வெளியிட்டிருக்கிறார். கொங்கு நாட்டு மக்களின் வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் நல்ல நாவல். வட்டார வழக்கை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

கதைத் தொகுப்புகள் பல வந்துள்ளன. எம். வி. வெங்கட்ராம்,

ஆர். சூடாமணி, என். ஆர். தாசன், மா. அரங்கநாதன் தொகுப்புகள் படித்தேன். நல்ல புத்தகங்கள்.

அன்பு

3. &i.

ரவி கே. தாஸ்

சென்னை.

29-4-93

அன்பு நண்ட, வணக்கம். வாழ்க்கையில் சந்தோஷங்களுக்குக் குறைவு இல்லை. சிறுசிறு சந்தோஷங்கள் என்றும் எங்கும் எப்போதும் உண்டு. அருமையான காபி சாப்பிடுவது இனிய சந்தோஷம். சிரிக்கும் முகத்தைப் பார்ப்பது, பிடித்த நண்பர்களோடு பேசுவது, நல்ல கவிதைகளை ரசிப்பது, சுவாரஸ்யமான புத்தகங்கள் படிப்பது - இப்படி எத்தனை எத்தனையோ.

தம்மை சுற்றிலும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மரங்கள் - அரசமரம் போன்றவை - இலைகளை உதிர்த்துவிட்டு புதுப்புதுக் கனவுகளாய், கலைத்துகள்களாய், அழகுகளாய் துளிர்கள் விட்டு தினந்தோறும் அவை மாற்றங்கள் பெறுவது முதல், கல் போன்ற விதைகளிலிருந்து சிறுமுளைகள் வெளிவந்து செடியாவது ஈறாக, அவை வகைவகையாய் வளர்ந்து விதம் விதமான மலர்கள் பூப்பது வரை எல்லாமே அற்புதங்கள் தான்.

மனசில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருப்பதும் அதிசயமேயாகும். -

எண்ணங்களை அழகு அழகாக எழுத்தில் பதிவு செய்யமுடிவதும் அதிசயம் தான். .

மனித உழைப்பு விதம்விதமான உற்பத்திகளை செய்து குவிப்பதும், அறிவும் ஆராய்ச்சியும் புதிய புதிய