பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 95

எழுதிக்கொடுத்திருப்பேன். முந்தாநாள் ஒரு நண்பரின் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதி அனுப்பினேன். அடுத்து ஒரு நாடகத்துக்கு எழுதும்படி ஒருவரின் கோரிக்கை.

இவை போக பலரும் சிறுபத்திரிகைகள், புத்தகங்கள் அன்புடன் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றைப் படித்துவிட்டு அவர்களுக்குக் கடிதங்கள் எழுதவேண்டி நேரிடுகிறது. இதுவும் அதிகமான காலத்தை எடுத்துக்கொள்கிறது. அன்பும் மதிப்பும் வைத்து யார்யாரோ அனுப்புகிறார்கள். படித்துப் பார்த்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது முறையல்ல என்பதால் எழுதுகிறேன்.

'அன்பர் பணி செய்ய ஆளாக்கிவிட்டுவிட்ட கதைதான். 'பராபரத்துக்காவது இன்பநிலை தானே வந்தெய்திய திருப்தி இருந்தது! எனக்கு காலம் எப்படி எப்படியோ போய்க் கொண்டிருக்கிறதே என்ற மனக்குறைதான் வளர்கிறது.

1993லும் பத்தாவது மாதம் பறந்து ஒடுகிறது: இன்னும் 5 வருடம் 2 மாதங்கள் தான். 'கு மந்திரக்காளி' என்பது போல் ஓடிவிடாதா என்ன அப்புறம் தொட்டாச்சு 2000த்தை 1-2000 என்று தேதியிட்டு எழுதக்கூடிய நன்னாள் வந்துவிடும். அன்று நான் இருப்பேனா? யார் கண்டது:

வாழ்க, வாழ்க என வாழ்த்திக்கொள்வோம்.

அன்பு

డA. తీ.

மு. நாகரத்தினம்

சென்னை

73-4–89 அன்பு சகோதர, வணக்கம். திடீரென்று நான் சென்னை வர நேர்ந்தது. நேற்று காலை வந்து சேர்ந்தேன். நலம்.

என் உள்ளம் வேதனையால் கனத்து வருகிறது. பொதுவாக உலகத்துத் துயரங்களை எண்ணி, மனிதர்களின் குறைபாடுகளை, அவலங்களை எண்ணி, வாழ்க்கையின் தன்மைகளை எண்ணி, ஒரு புத்தனின் துயரச்சுமை அது ஏகவின் இதயகனம் அது.