பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திர நாவல் பற்றி ព្រឹ ផ្ទិ

சிமீப நாட்களில், என் நண்பர் ஒருவர் தனது இளமைக் காலத்தில் தான் படித்திருந்த வடுவூரார், ஆரணி குப்புசாமி முதலியார் நாவல் களை நினைவுகூர்ந்து ரசமாகக் கடிதங்கள் எழுதினார். 1930கள் 40களில் படித்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களின் நயங் களை இப்பவும் மறக்க முடியவில்லை என்று அவர் வியந்திருந்தார். இப்போது அவருக்கு வயது 76க்கு மேல் இருக்கலாம்.

இந்த நூற்றாண்டின் முப்பதுகள் நாற்பது களில், படிப்பதில் ஈடுபாடு கொண்ட வாசகர்கள் பலரும் கட்டாயமாக வடுவூரார், ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வை.மு. கோதைநாயகி நாவல்களைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். எல்லாம் பெரிசு பெரிசாக - சில இரண்டு பாகங்கள் கொண்டதாகஇருந்தன.

இருப்பினும், வடுவூராரின் திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், தாசி துரைக் கண்ணம்மாள், திவான் லொடபடசிங் பகதூர் போன்ற நாவல்கள் பெரிதும் விரும்பிப் படிக்கப் பட்டன. வயது வித்தியாசம் இல்லாமல் வாச கர்கள் அவற்றை விழுந்து விழுந்து வாசித்து மகிழ்ந்தார்கள். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் கூடத்தான்.