பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைப் பயணம்

  • 6tழுத்தாளராக முன்னேறவேண்டும் என்ற நோக்கத்துடன் வல்லிக்கண்ணன் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நடந்தே வந்தார்”

இப்படி ஒரு தகவல் அவ்வப்போது ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனைப் பாராட்டிப் பேச முற்படுகிறவர்களில் எவராவது ஒருவர் இதை மேடையில் ஒலிபரப்பிக்கொண்டு தானிருக் கிறார்.

இத்தகவலில் உள்ள ஒரு கவர்ச்சித் தன்மை காரணமாகத்தான் இது அடிக்கடிப் பேசப்படுகிறது. ஆயினும் இது உண்மை யில்லை. எனினும் இதில் உண்மை இல்லா மலும் இல்லை.

நான் 1942 மேமாதம் 25ஆம் நாள் அதிகாலையில், திருநெல்வேலி அரசடிப் பாலத்தெரு வீட்டிலிருந்து வெளியேறினேன். நடந்தே சென்னை போய்ச் சேரவேண்டும் எனும் எண்ணத்தோடுதான்.

திருநெல்வேலிக்கும் சென்னைக்கு மிடையே நானூறு மைல் தூரம் தினசரி