பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 (32 வல்லிக்கண்ணன்

கூரையிலிருந்து தொங்கிய சரவிளக்கு. எண்ணெயில் எரியும் திரிவிளக்குதான் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. இரவு மணி பன்னிரண்டு என்று ஒரு கடையின் சுவர்க்கடியாரம் அறிவித்தது. மற்றுமொரு முப்பது மைல்கள் கடந்திருந்தேன் என்ற நிறைவு எனக்கு. கடைவீதியின் தண்ணீர்க் குழாயில் அப்போதும் தாராளமாகவே தண்ணிர் வந்து கொண்டிருந்தது. திருப்தியாக நீர் பருகினேன். நடந்தேன். கள்ளிக்குடி வந்தது. சாலையோரக் கடைகள் திறந்திருந்தன. கூண்டு வண்டிகள் மைதானத்தில் நின்றன. விடிந்தால் சந்தை கூடும் என்று தோன்றியது. வண்டிகள் இல்லாத வெற்றிடத்தில் படுத்தேன். தூக்கம்தான்.

திடீரென யாரோ எழுப்பிய உணர்வு விழிப்பு தந்தது. மைதானம் கூண்டு வண்டிகளால், மாடுகளால், மனிதர்களால் நிறைந்து காணப்பட்டது. என் அருகில் ஒரு வண்டி நின்றது. அந்த வண்டிக்காரன்தான் என்னை எழுப்பியிருக்கிறான். வண்டியை இங்கு நிப்பாட்டனும், மாடுகளை அவிழ்த்துக் கட்டணும். எழுந்து தள்ளிப்போ என்று குரல் கொடுத்தான்.

எழுந்து நடந்தேன். இரவு நீண்டிருந்தது. தனித்த ரோட்டில் தனியனாய் நடந்தேன்.

எரிந்துகொண்டிருந்த எலெக்ட்ரிக் லைட்டுகள். துரங்கும் திருமங்கலம் ஊரைச் சலனமற்ற வெறுமையாய்க் காட்டி நின்றன. நான் நடந்துகொண்டிருந்தேன்.

வைகறை வேளையில் திருப்பரங்குன்றம் வந்துவிட்டேன். விசாலமான குளத்தில் நிறையவே தண்ணிர் கிடந்தது. குளிப்ப வர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் நன்கு நீராடினேன். வேட்டி சட்டையை நனைத்து கரைமீது நின்றபடி உலர்த்தினேன். இனிய காற்று துணை புரிந்தது. நான் செருப்பு அணிந்திருக்கவில்லை. ரோட்டில் நடந்து கொண்டிருந்ததால் பாதத்தில் விரல்களிடையே வெடிப்பு ஏற்பட்டு வலி தந்தது. மூன்றாவதுநாள் இரண்டே கால் நாட்களிலேயே) மதுரை வந்து சேர்ந்தாச்சு. 95 மைல்கள். மேலும் நடந்துநடந்து போவதே சிரமம்தான். எனவே மதுரையில் வசித்த ராஜவல்லிபுரம் உறவினர் ஒருவரிடம் சிறிது பணம் கடனாகப் பெறுவது. காரைக்குடிக்கு ரயிலில் போவது. அங்கே இருந்த இந்திரா மாதப் பத்திரிகை அலுவலகத்தில் இடம் கிடைக்குமா என முயல்வது. இல்லையெனில் ஆசிரியர் ப. நீலகண்டனிடம் ரயில் செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு சென்னைக்கு ரயிலில் போவது என்று திட்டமிட்டேன். மதுரையை நோக்கி நடந்தேன். காலை 9.30 மணிக்கு அந்த உறவினரைச் சந்திக்க முடிந்தது. அன்று அவருட