பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் #03

னேயே தங்கினேன். மறுநாள், காரைக்குடிக்குப் போக ரயில் டிக்கட்டுக்கான பயணம் மட்டும் மூன்றுரூபாய் அவரிடம் கேட்டுப்பெற்றேன். ரயிலில் பணம் செய்து காரைக்குடி போனேன். இரவு வந்திருந்தது. ரயில் நிலையத்திலேயே படுத்துத் தூங்கினேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து காரைக்குடி ஊருக்குள் சென்று இந்திரா அலுவலகம் அடைந்தேன். இந்திரா நடத்திய சிறுகதைப்போட்டியில் என்கதை, முதல் பரிசு பெற்றி ருந்தது. அது தவிர மாதம்தோறும் எனது சிறுகதையை இந்திரா வெளியிட்டு வந்தது.

ஆனாலும் அங்கே எனக்கு இடம் இல்லை என்று புரிந்தது. யுத்தகாலம். சென்னை சென்றாலும் பத்திரிகைகளில் இடம் கிடைப்பது சிரமம். கிடைக்காது என்றே சொல்லலாம். எனவே நீங்கள் திருநெல்வேலிக்குத் திரும்பிப் போவதே செய்ய வேண்டிய நல்ல காரியம் என்று ப. நீலகண்டனும், சக்தி பத்திரிகை ஆசிரியர் வை. கோவிந்தனும் தி.ஜ. ரங்கநாதனும் மற்றும் சிலரும் அறிவுரை கூறினார்கள்.

வேறு வழியில்லை. ஆகவே வீட்டுக்கு என் அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன். திரும்பி வருவதற்கு அண்ணா பணம் அனுப்பி வைத்தார். வெற்றிகரமாக நான் வாபசானேன்.

இதுதான் எனது நடைப்பயணத்தின் உண்மை வரலாறு. சென்னைக்கு நடந்தே போகவேண்டும் என்கிற என் கனவு கால்வாசிதான் பலித்திருந்தது. மீதி? சிதைந்த கனவுதான்.