பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற வேண்டிய விஷயம்

கடந்தகால இனிய அனுபவங்களைத் தற்காலத்தில் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவதில் தனி இன்பம் காணும் முதிய நண்பர் ஒருவர் அடிக்கடி அலுத்துக் கொள் கிறார். முன்பு ஆனந்தமாகப் பொழுதுபோக்க வகை செய்த இடங்கள் பலவும் இப்போது சிதைந்து சீர்குலைந்து மகாமோசமான சூழ்நிலைகளாக மாறிப் போயிருப்பதைக் குறித்துத்தான்.

இளமைப் பிராயத்தில் அவரும் அவரு டைய நண்பர்களும் மாலைவேளைகளில் தாமிரவருணி ஆற்றின் மணல் வெளியில் ஒடி ஆடி விளையாடிக் களித்தார்கள். பிறகு மணலில் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்கள். நிலாக்கால இரவுகளில் இனிமைகள் அதிகரித் திருக்கும். ஆற்றங்கரைப் பிள்ளையார் கோயில், கட்டிடம் இன்றிக் காணப்பட்டாலும் அமைதி யும் தூய்மையும் நிறைந்த இடமாக இருந்தது. ஆற்றில் தண்ணிர் சுத்தமாக, தெளிவாக, ஒடிக் கொண்டிருந்தது. அதில் குளிப்பதே தனி சுகம்.

காலஓட்டத்தில் தூரதொலைவில் வெளி மாவட்டங்களில் பணிபுரிய நேரிட்டதால், நண்பர் வெளியூர்வாசியாகவே வாழ்ந்து விட்டார். ஆயினும் எப்போதும் தாமிர வரணியும் மணல்வெளியும் தெளிநீரும்