பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் is);

குளிப்பு சுகமும் அவர் மனசில் நீங்காமல் நிலைத்திருந்தன. ஆற்றங்கரைப் பிள்ளையார் அவர் உள்ளத்தில் ஆசை காட்டிக் கொண்டுதான் இருந்தார்.

ஊருக்குப்போய் அங்குள்ள இடங்களை எல்லாம், முக்கிய மாக ஆற்றையும் முன்னொரு காலத்தில் நண்பர்களோடிருந்து பேசிப் பொழுதுபோக்கிய மணல் பரப்பையும், மனசுக்கு இதம் தரும் பிள்ளையாரையும் மீண்டும் கண்டுகளிக்க வேண்டும். ஆற்றில் நீராடும் சுகஅனுபவத்தைப் பெறவேண்டும் என்ற நினைப்பு அவருள் உறுத்தலாக நிலைபெற்றிருந்தது.

ஒருநாள் போனார். பார்த்தார். ஏன் வந்தோம் என்று வருத்தம்தான் ஏற்பட்டது அவருக்கு ஆறு ஆறாக இல்லை. பல இடங்களில் நகர்ப்பகுதிகளின் சாக்கடை நீர் வாய்க்காலாய்ப் பெருகி ஓடிவந்து ஆற்றில் கலந்து கொண்டிருந்தது. ஆற்றுநீர் அசையாது குட்டை குட்டையாய்த் தேங்கி நின்றது. நீரில் கால் வைக்கவே கூசினார் நண்பர். அவருக்கு மேலும் அதிக வேதனை தந்தது. ஆற்றுப்படுகையில் எங்குமே மணல் என்பதே தென்பட வில்லை.

நண்பருக்குப் பிடித்தமான பிள்ளையார், சிறைக் கம்பி போல் கம்பி அளி போடப்பட்ட சிறுகட்டிடத்தினுள் அடைப்பட்டி ருந்தார். அந்தக்கோயிலும் பூட்டப்பட்டிருந்தது. இது புனித இடமாகத் தோன்றவில்லை. குப்பையும் அசுத்தங்களும் சிதறிக் கிடந்த சூழ்நிலை அவருக்கு மனவேதனை அளித்தது.

இதுபற்றித்தான் நண்பர் கடிதத்தில் வேதனையோடு குறைப்பட்டிருந்தார். ஊர்களும் தெருக்களும் நகரமும் வளர்ச்சி என்ற பெயரில் சீர்குலைந்து அழகற்றுக் காணப்பட்டதாக அவர் வருந்தினார். எங்கும் கும்பலும் நெருக்கடியும், பரபரப்பும் அவசரமும், முண்டி அடித்து முட்டி மோதுதலும் அவரைச் சங்கடப்படுத்தின. ஏன் வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சு என்று பெருமூச்செறிந்து கொண்டிருக்கிறார் அவர்.

தாமிரவரணியை அதன் பல்வேறு நிலைகளில் பார்த்து நான் ரசித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். வருத்தப்பட்டுமிருக் கிறேன். என் சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே நான் அந்த ஆற்றை நேசித்து வந்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் 1920-1930களில் அந்த ஆறு இளமை வனப்புடன் இனிய காட்சியாக விளங்கியது. வெள்ளிய மணல் எங்கும் பரவிக்கிடக்க நடுவிலோ - ஒரத்திலோ தண்ணீர் தெளிவாக, அழகாக, நெளிந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தது. நீரின் அடியில் மணல் செம்மையும் கருமையும் கலந்த ஒரு