பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்விக்கண்ணன் கட்டுரைகள் 霄7

பயிற்சிகள் பற்றியும் ஆரோக்கியத்துக்கு வகை செய்யும் உணவு வகைகள் குறித்தும் சுவாரசியமாக எழுதினார். வாசகர்கள் பலருக்கு வழிகாட்டியாக விளங்கிய பயனுள்ள எழுத்து அது.

காலஓட்டத்தில் நிலைமைகள் மாறின. பாபநாசத்தில் ஆற்றில் அணை கட்டப்பட்டது. நீர்தேக்கி வைக்கப்பட்டது. அதன் பாதிப்புகள் ஆறுநெடுகிலும் ஏற்பட்டன. நீரோட்டம் குறைந்தது. திருநெல்வேலிப் பாலம், பூரீ வைகுண்டம் பாலம் போன்ற தடுப்பு நிலைகளில் சேறும் சகதியும் கொழ கொழத்தன. நாளடைவில் ஆற்றுப்படுகையில் மணல் படிவதில்லை. முன்பு பரந்து விரிந்து கிடந்த மணல் அழுக்காகி, அசிங்கமாகி, பாழ்பட்டு மெதுமெது வாக மறையலாயிற்று.

ஆற்றோரத்தை ஒட்டி ஓர் ஊரில் துவக்கப் பெற்ற காகித ஆலையின் கழிவு நீர் ஆற்றில் கலக்கவிடப்பட்டது. வளர்ந்து வந்த ஜனப்பெருக்கம் மிகுந்த ஊர்களின் நகரங்களின் - சாக்கடை நீரும் ஆற்றில் வந்து கலந்தது. ஆறே பெரிய கழிவுநீர்க் கால்வாய் ஆக மாறிப்போயிற்று.

கரை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நின்ற மருத மரங்கள் வெட்டுண்டன. நீர்க்கருவை என்று சொல்லப்படுகிற - வேகமாக மண்டி வளரும் முட்செடிப் புதர்கள் எங்கும் செழித்துப் படர்ந்தன. ஆற்றங்கரை ஓர ஊர்களுக்கு அழகு செய்து நின்ற மாந்தோப்புகள் அழிந்துபட்டன. * -

1960கள் வரைகூட மக்கள் ஆற்றங்கரைப் பாதை வழியாக நடந்துபோவது வழக்கமாக இருந்தது. கிராமங்களில் இருந்து மோர் . தயிர், நெய்யைக் கூடையில் தலைமீது சுமந்து ஆற்றங் கரைமீது வளைந்து நெளிந்து பளிரெனக் கிடந்த ஒற்றையடித் தடம் வழியாக நடந்து, பக்கத்து நகரங்களுக்குக் கொண்டுபோய் விற்பனை செய்தார்கள். பிறகு அவ்வழியே திரும்பினார்கள். பூ . கொழுந்து போன்றவற்றை விற்பனை செய்ய எடுத்துச் சென்ற வர்களும் அப்படியே போய்வந்தார்கள். ஊர்வழி போகிறவர் களும் நடந்தார்கள்.

காலம் மாறுதல்களை விதைத்தவாறே நகர்கிறது. அனைத்து ஊர்களுக்கும் பஸ் வசதி ஏற்பட்டது. சுகமாக, பஸ்சில் பயணம் செய்து போகிற வசதி இருக்கிறபோது நடந்து போய் சிரமப்படு வானேன் என்ற மனநிலை மக்களிடம் ஏற்பட்டது. வளர்ந்து கொழுத்தது. சிறுதுாரத்துக்குக்கூட நடந்து போகச் சோம்பி னார்கள் மனிதர்கள். கால்மணி நேர நடையில் அடைந்துவிடக் கூடிய இடத்துக்குப் போவதற்கு, பஸ்சை எதிர்பார்த்து அரை மணி நேரம் - முக்கால் மணி நேரம் என்று காத்து நிற்கலானார்கள்.