பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கன்னன் கட்டுரைகள் 444

சுதேஷ்னா சக்ரவர்த்தி எனும் வங்கமொழிப் படைப்பாளி எழுதிய அகலிகைகதையின் தமிழாக்கத்தை அண்மையில் படித்தேன். முற்றிலும் வித்தியாசமான, புதுமையான, அந்தக் கற்பனை தமிழில் வந்துள்ள பல்வேறு அகலிகைகதைகளையும் என் நினைவில் ஒடச் செய்தது.

வால்மீகி படைத்துவிட்ட அகலிகையின் கதை நேயர் களுக்குத் தெரிந்திருக்கும். அழகுமிகுந்த பெண்ணான அகலி கைக்குத் திருமணம் செய்ய நிச்சயித்த பிரம்மா அவளைப் படைத்தவர். ஒரு நிபந்தனை விதித்தார். "இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் யார் முதலில் வலம் வருகிறானோ அவனுக்கே அவள் உரிமையாவாள்' என்றார். அனைவரும் பயந்து விலகினர். இந்திரன் துணிந்து முன் வந்தான். ஐராவதம் என்ற யானையின் மீதேறி வலம்வரத் தொடங்கினான். ஆனால் கெளதமன் (கோதமன்) என்கிற முனிவன், அருகில் நின்ற காமதேனு எனும் பசுவை வலம் வந்து, "இக்கோமாதாவிடம் அகில பிரபஞ்சங்களும் அடக்கம். இவளை வலம் வந்ததன் மூலம் நான் பிரபஞ்சத்தை வலம் வந்தவனாகிறேன்” என்றான். அவனது தர்க்க நியாயத்தை அங்கீகரித்த பிரம்மா அகலிகையை முனிவனுக்கே மணம் முடித்து வைத்தான்.

வேகம் வேகமாய்ச் சுற்றிவிட்டு வந்த இந்திரன் பேரழகி அகலிகை வறட்டு தாடி முனி ஒருவனோடு குடில் ஒன்றில் ஒடுங்கி விட்டதை அறிந்து உளம் கொதித்தான். எப்படியும் அவளுடன் இன்பம் நுகரத் தவித்தான். தவிப்பு அதிகமான ஒர் இரவில் தனது சக்திகளால் வஞ்சனைகள் புரிந்து கோதமனை ஏமாற்றி வெளி யேற்றினான். விடியும் வேளை வந்துவிட்டது என மயங்கிய முனிவன் நீராட நதிக்கரை சென்றான். அவ்வேளையில் இந்திரன் கெளதமனின் உருவில் வந்து, அகலிகையோடு இன்பம் துகர்கிறான். இன்னும் பொழுது புலர நேரம் கிடக்கிறது என்று கண்டுகொண்டு முனிவன் வீடு திரும்பியதும் உண்மையை உணர்ந்து வெகுண்டு இந்திரனைச் சபிக்கிறான். அகலிகையையும் கல்லாகும்படி சாபம் கொடுக்கிறான்.

இந்தக்கதையைப் படித்தவர்கள், அகலிகை தவறு செய்ய வில்லை என்று எண்ணுவோரும், அவளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நியாயமானதில்லை என்போரும் அவரவர் கற்பனைத் திறனைக் காட்ட விரும்பினார்கள்.

அகலிகைகதையைப் பாட வந்த கம்பன் அவள் உடலினால் பிழை செய்ய நேரிட்ட போதிலும், உள்ளத்தால் பிழை.இலாதவள். அவள் அந்நியன் ஆன இந்திரனைக் கூடியிருந்த வேளையிலும்