பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 வல்லிக்கண்ணன்

தன் கணவனான கெளதமனே தன்னைத் தழுவியிருக்கிறான் என்றே நம்பி இன்புற்றாள் என்று கூறிவைத்தான்.

கம்பஇராமாயணத்தைத் தழுவி அகலிகை 4. வெண்பா இயற்றிய வெப. சுப்பிரமணிய முதலியார், ಹL೯ಾಣ! போலவே அகலிகை உள்ளத்தால் பிழை இல்லாதவள் என்றே முடிவு கட்டினார். அவள் உள்ளத்து உளைச்சலிருந்து விடுபடும் வகையில் கல்லாகி பாறைப் படுக்கையில் துயிலும்படி வெப.க உதவி புரிந்திருக்கிறார் என்று ரசிகமணி டி.கே.சி. எழுதியுள்ளார்.

தமிழில் மறுமலர்ச்சி சிந்தனைகள் எழத்தொடங்கிய பின்னர், படைப்பாளிகள் அகலிகை கதைக்குத் தீவிரமான மெருகுகள் திட்ட முனைந்தார்கள். உள்ளம், உணர்வு, உடல் என்ற கோணங்களில் கவனிப்பு செலுத்தினார்கள்.

சது. சுப்பிரமணிய யோகியார் பாடியுள்ள அகலிகை விசேஷ மான படைப்பு. மேகமலர் காவனத்தே பூக்கொய்து விளையாடும் அகலிகையைக்கண்டு மோகம் கொள்கிறான் இந்திரன். வான வில்லின் வீதியிலே அவள் துள்ளித் திரிவதைப் பார்த்துப் பித்தேறிப் போனான். அவளை அடையத் தவிக்கிறான். வஞ்சனைகள் செய்து தாடி முனியை வெளியேற்றிவிட்டு கெளதமன் போல் வந்து அவளைத் தழுவுகிறான். என்றுமிலா ஆசை என் கணவர் கொண் டாரே என உளம் மகிழ்ந்து அவள் அவனோடு இன்பமொக்க உடன் உண்டு இருந்தாள் என்று விவரிக்கிறார் கவிஞர். பின்னர் வழககமான கதைதான.

உள்ளத்தால் ஏங்கிய அகலிகை உடலின்பம் பெறத் தயாராக இருந்தாள். காமுகன் ஆன இந்திரன் பயன்படுத்திக் கொண்டான் என்ற ரீதியில் கு.ப. ராஜகோபாலன் அகலிகை நாடகம் எழுதினார்.

ந. பிச்சமூர்த்தி அகலிகைகதையில் புதிய பொருள் புகுத்தினார். உயிர்மகள் என்பது அவர் எழுதிய கவிதைக் கதை ஆகும். அதற்கு முன்னதாக, புதுமைப்பித்தன் எழுதிய அகலிகை கதை முக்கிய மாகக் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகளை உரிய முறையில் அழகான நடையில் விவரித்துவிட்டு, இறுதிக்கட்டத்தில் புதுமை சேர்த்தார் புதுமைப் பித்தன். கோதமனை உன்னத மனிதனாக மாற்றிவிட்டார் கதையில், தான் வஞ்சிக்கப்பட்டதைப் புரிந்து கொண்ட முனிவர் கொதிக்கவில்லை. கோபம்கொண்டு சாபமிடவில்லை. தன் உணர்ச்சிகளை வென்றுவிட்ட சான்றோனாகத் திதழ்கிறார். "அப்பா இந்திரா உலகத்துப் பெண்களை எல்லாம் உன் சகோதரி களாக மதித்து நடக்கக்கூடாதா?’ என்று இந்திரனிடம் கேட்ட