பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் கட்டுரைகன் - 143

முனிவர், அகலிகையிடம் உன் உணர்வுகள் அந்நேரத்தில் உண்மையை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு நீ கல்லாகி விட்டாயா?" என்று வினவுகிறார். இப்படி ஒரு மாமனிதனாக முனிவர் நடந்து கொள்வதோடு கதை முடிந்து விடுகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு புதுமைப்பித்தன் அகலிகை கதையை மீண்டும் எழுதினார் சாபவிமோசனம் என்று. இராமனின் பாதம்பட்டு கல்லிலிருந்து உயிர்த்தெழுந்த அகலிகையின் உணர்வு களையும் அனுபவங்களையும் நுண்மையாகச் சித்திரிக்கிறது இந்தக் கதை. ஒரு சமயம் சீதை தன் அனுபவங்களை இராமன் கூறி அவள் தீக்குளிக்க நேர்ந்ததை அவளிடம் சொல்கிறாள். அதைக் கேட்கவும் அகலிகை கொதிப்படைகிறாள். ஆண்களின் அநீதி அவள் உள்ளத்தைத் துன்புறுத்துகிறது. அமைதியிழந்த அகலிகை, மீண்டும் தீர்த்தயாத்திரை போகலாம் எனும் கணவனின் யோசனையை ஏற்கிறாள். அப்படிக் கிளம்புவதற்கு முன்னர் அவள் கல்லாகிப் போகிறாள்.

அகலிகை மீண்டும் கல்லாகிவிட்டாள் என்பது இந்த இடத்தில் அவள் உயிர் பிரிந்து அவள் உடல் இயக்கமற்று கல்போல் கனத்து விட்டதையே குறிக்கும் என்று சி.சு. செல்லப்பா விளக்கம் கூறுகிறார்.

ந. பிச்சமூர்த்தியின் உயிர்மகள், அகலிகையை உயிர் என்றும் புலன்களின் கதவும் தட்டி, உயிரிலே உணர்ச்சி கூட்டும். இன்பமே வடிவம் கொண்டவன் இந்திரன் என்றும், உண்மையிலே மனமே ஆனோன் கோதமன் எனவும் உருவகப்படுத்துகிறது, அகலிகை கதையை நயமாக விவரிக்கும் இந்நெடுங்கவிதை. இராமனின் கூற்றாகச் சில விளக்கங்களைத் தருகிறது.

சிருஷ்டியின் நுண்மை அறியா மனமுணியான நீ புலனைப் பகைவனாய்ப் பார்த்திட்டாய். கற்பென்றும் கடமையென்றும், கனவுகள் கண்டு உயிரை கானல்நீர் சுவைக்க கட்டளை மனத் தாலிட்டாய். உயிரற்ற மனம் ஒன்றுண்டா? உடலற்ற நிழலொன் றுண்டோ? பெண் இனம் நெஞ்சை இன்றும் மானிடர் அறிய வில்லை. பாசம் ஒன்றே கொள்ளும் பெண்ணைப் பாரிலே காண லரிது. கள்ளப்புருஷனென்றோ மின்னிடும் அணிகள் என்றோ, மயக்கிவிடும் துணிகளென்றோ, மணத்திடும் மலர்களென்றோ, பெண்மனம் கொள்ளை கொள்ளும் என்று இராமன் முனிவ னுக்கு விளக்குவதாகக் கவிதை வளர்ந்துள்ளது.

"ஞானம் பெற்று வளர்ச்சி பெற்ற முனிவனே, இந்திரனின் வஞ்சகப் போக்கை உணரும் திறன் உனக்கே இல்லை என்றான போது, அப்பாவி அகலிகை ஏமாற்றப்பட்டதற்கு அவளைக் குறை

ഖു-7