பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 115

சுதேஷ்ணா சக்ரவர்த்தியின் வங்கமொழிச்சிறுகதை அகலி கையும் இந்த உள்ளம் - உடல் விவகாரத்தைத் தான் உட்பொரு ளாகக் கொண்டுள்ளது. சற்றே வித்தியாசமான கற்பனை.

மகரிஷி கெளதமரின் ஆசிரமத்துக்கருகில் ஒர் ஒரத்தில் கிடக்கிறது ஒரு பாறை. அதுதான் சாபம் பெற்ற அகலிகை. அவள் சாப விடுதலை பெறும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்த இந்திரன் ஒரு மேகமாக வந்து அந்தப் பாறையுடன் பேசுகிறான். கல்லுக்கும் பேசும் சக்தி அளிக்கிறான். இருவரது உரையாடலும், அகலிகை உள்நினைப்பும் சுவாரசியமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.

"மகரிஷி எப்போதோ உன்னை மன்னித்து விட்டார். நீ ஏமாற்றப்பட்டவள், குற்றவாளி இல்லை என்பதை அவர் உணர்ந்து விட்டார். இராமன் வருகிறான். அவனது பாததுரளி பட்டு நீ உன் சுய உருவை அடைவாய், அசாதாரண அழகு மீண்டும் உனதாகும். அகலிகே சாபவிடுதலை பெற்ற பின் நீ எங்கே போவாய்? என்ன செய்வாய்?" என்று கேட்கிறான் இந்திரன்.

"நான் மகரிஷியின் ஆசிரமத்துக்கே திரும்புவேன்" என்று அகலிகை கூறவும், இனி அவள் சுதந்தரமானவள் என்றும் அவள் தன்னுடன் வரலாம். அவளுக்காக மற்றொரு மேலான சுவர்க்கத் தையே படைக்கமுடியும் என்றும் அவன் ஆசை காட்டுகிறான். இப்படிப் பேச்சு வளர்கிறது.

"அன்று கெளதமரின் ஆசிரமத்தில் என் தோல்வியை எதிர் கொண்டேன். இந்திரனாக உன் உள்ளத்தை ஈர்க்க இயலவில்லை என்னால். உன்னை அடைய நான் கெளதமராக வேடம் புனைய நேர்ந்தது. கணவனை நினைத்து நீ எனக்கு உன்னையளித்தாய். இந்தத் தோல்வி என்னை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. நீ என்னை - எனக்காக விரும்பும்போது அது என் வேதனையைப் போக்கிவிடும். நான் வேண்டுவது உன் உடலழகை மட்டுமில்லை. உன் உள்ளத்தையுந்தான்” என்கிறான். மறுப்புகள் கூறும் அகலிகைக்கு அவன் பசப்புமொழிகள் சொல்லி, அவள் மனத்தை மாற்ற முயலுகிறான். நீண்ட பேச்சு அது.

"அகலிகே இந்திரனின் ஸ்பரிசத்தை ஒருமுறை அனுப வித்தவள். அதைப் பின்னர் ஒருபோதும் மறக்க மாட்டாள். கெளதமர் உருவில் வந்த இந்திரனை நீ தினம் நினைத்துக் கொள்வாய். கணவருடன் உறவில் என்றாவது ஒர் அமைதியான - வழக்கத்துக்கு மாறுபட்ட இன்பம் உனக்குக் கிடைத்தால், உடனே உனக்கு ஐயமெழும். உன்னோடு உறவு கொண்டிருப்பவர் உண்மையில் கெளதமர்தானா அல்லது நானா என்று".

"இல்லையில்லை. நான் உன்னை முற்றிலும் மறந்து விடுவேன்.