பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 வல்லிக்கண்ணன்

ஆனால் உண்மையான பெரிய மனிதர்கள் போலிப் பெருமை களுக்கும், ஆடம்பரங்களுக்கும், வீணத்தனமான கெடுபிடி களுக்கும் ஆசைப்படுவது கிடையாது.

மிகாயில் லோஷ்செங்கோ என்கிற ரஷ்ய எழுத்தாளர் எழுதியுள்ள ஒரு வரலாற்றுக் குறிப்பு எவ்வளவோ உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. அவர் எழுதியுள்ளது. இது.

அன்று பார்பர் ஷாப்பில் ஏகப்பட்ட கூட்டம். சிகை அலங்காரத் தொழிலாளிகள் இருவர் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தனர். வாடிக்கையாளர்கள் பலர் தங்களது முறைக் காகக் காத்திருந்தனர்.

அப்போது கதவுதிறந்தது. மக்கள் கமிசார்களின் கவுன்சில் தலைவர் விளாதிமிர் கடைக்குள் வந்தார். எல்லோரும் எழுந்து நின்றார்கள். "எப்படி இருக்கிறீர்கள் தோழர் லெனின்" என்று கேட்டனர். லெனினும் அவ்வாறே விசாரித்தார். பிறகு "வரிசையில் கடைசியாக இருப்பது யார்?" என்று கேட்டார்.

லெனின் கேட்ட கேள்வியால் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்தனர். லெனின் க்யூவில் காத்திருக்க வேண்டியதில்லை. அவர் அரசாங்கத்தின் தலைவர். அவரது ஒவ்வொரு நிமிஷமும் விலைமதிப்பற்றது என்று அங்கிருந்த அனைவரும் கருதினர். விளாதிமிர் இலியச், வரிசையில் கடைசியாக இருப்பது யார் என்பது முக்கியம் அல்ல. இப்போது அந்தத் தொழிலாளி வேலையை முடித்துவிடுவார். உடனே அந்த நாற்காலியில் உங்களுக்கு வேலைசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் க்யூவில் வரவேண்டியதில்லை" என்று எல்லோரும் சொன்னார்கள்.

ஆனால் லெனின் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தோழர் களே, மிக்க நன்றி. ஆனால் அது சரியல்ல. வரிசையில் வருவதை நாம் எல்லோரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் ஒழுங்கை அனுஷ்டித்தாகவேண்டும். நாம் நமக்காகவே சட்டங் களை உருவாக்கிக்கொள்கிறோம். அவற்றை வாழ்வின் மிகச் சிறிய விஷயங்களிலும் நாம் நிறைவேற்றத்தான் வேண்டும் என்று சொன்னார். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து தமது கோட்டுப் பையிலிருந்து ஒரு செய்தித்தாளை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டார்.

வாடிக்கையாளர்களில் ஒருவர் எழுந்து லெனின் அருகே வந்து பேசினார். விளாதிமிர் இப்போது என்னுடைய முறை வந்திருக்கிறது. ஆனால், உங்களை இங்கே காத்திருக்கும்படி செய்யாமலே இருப்பேன். இந்த வரிசைமுறைகளை மீறி நீங்கள்