பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 வல்லிக்கண்ணன்

தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த விடுமுறை நாளில் நாடெங்கும் மக்கள் உழைத்தனர். தொழிலாளர் அலுவலக ஊழியர் ராணுவப் பள்ளி ஒன்றின் மாணவர்கள் ஆகியோர் கிரெம்ளின் சதுக்கத்தில் காலை எட்டு மணிக்கே குழுமி விட்டார்கள். அந்தச் சதுக்கத்தைச் சுத்தம் செய்வதுதான் அவர்கள் பணி, லெனினும் அங்கே இருந்தார்.

அவர்கள் முதலில் மரக்கட்டைகளை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். இருவர் இருவராகச் சேர்ந்து வேலை செய்தார்கள். லெனின் ஒரு இளம் மாணவனுடன் இணையாக வேலை செய்தார். அந்த மாணவர் மரக்கட்டையின் ஒரு சிறிய பகுதியை மட்டும் லெனின் தூக்கும்படிச் செய்து, பெரிய பகுதியைத் தானே தூக்க முயன்றார். உடனேயே லெனின் இதைக் கவனித்துக் கொண்டார். பிறகு அந்த மாணவருக்கு முன்னதாகவே அவர் மரக்கட்டையிடம் முந்திக்கொண்டு துக்கலானார். மாணவர் சொன்னார், நீங்கள் 50 வயதானவர். நானோ 28 வயதுடையவன் என்று. லெனின் கட்டையின் பளுவான பகுதியைத் துரக்கித் தோளில் சுமந்து கொண்டே, நான் உனக்கு சீனியராக இருப்பதால் என்னுடன் விவாதிக்காதே என்றார்.

மரக்கட்டைகள் எல்லாவற்றையும் அகற்றியபிறகு ஒக் பகுதிக்குத் திரும்பினார்கள். இங்கு லெனினுடன் மூன்று மாணவர் களும் இரண்டு தொழிலாளர்களும் வேலை செய்தார்கள். இது சற்று அதிகக்கடினமான வேலை. உடல் உழைப்பில் நன்கு பழக்கப் பட்ட தொழிலாளர்களின் முகத்தில் கூட வேர்வைத்துளிகள் பெருக்கெடுத்தன. அவர்களில் ஒருவர் லெனின் இல்லாமலேயே அந்த வேலையை அவர்கள் முடித்து விடஇயலும் என்றும் லெனின் இதைவிட முக்கியமான வேலைகளைக் கவனிக்கலாம் என்றும் அவரிடம் சொன்னார். லெனின் என்ன கூறினார்: "இந்த நேரத்தில் இதுதான் முக்கியமான வேலை என்று சொல்லி உழைப்பைத் தொடர்ந்தார். (ஆதாரம் அலெக்சாந்தர் கொனோனேவின் கட்டுரை) - -

புத்தகங்களைப் படிக்காமல் இருப்பது பெரிய மனிதப் பண்புகளில் ஒன்று என்று எண்ணியும் பேசியும் திரிகிறவர்கள் ஒன்றிருவர் அல்லர். எழுத்தாளர்களில்கூட இப்பேர்ப்பட்ட பெரியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், பெரும்தலைவர் லெனின் ஓயாது ஒழியாது படிப்பதன் மூலம் அறிவை அகண்ட தாக்கி, நோக்கை விரிவு செய்யத் துடித்தார். எப்போதும், எங்கும் அவர் புத்தகங்களை அவாவினார். தலைமறைவு நாட்களிலும், அயல்நாடுகளில் வசித்தபோதும் புதிய புதிய புத்தகங்களைத் தமக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்படி நண்பர்களுக்கு