பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் கட்டுரைகள் 427

நகரங்கள் அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தன. அங்கு தானே அவனது வேட்டைக்கு வாய்ப்புகள் நிறைய இருந்தன. அலங்காரிகளும் ஆடம்பரவல்லிகளும் சிங்காரிகளும் உல்லாச மோகினிகளும் அங்கு வீதிகளில், தியேட்டர்களில், வண்டிகளில் காட்சி அளித்தார்கள். சூதாட வசதி செய்யும் இடங்கள் இருந்தன. கேளிக்கை மண்டபங்களும் விபசார விடுதிகளும் இல்லாமலா போகும்? ஆகவே வாழத் துணிந்திருந்த அவனுக்கு இன்பவாழ்வு வாழ நகரங்களே வசதிசெய்து தந்தன.

அவன் ரசிகன். இன்னிசையை ரசித்தவாறு ஒரு கவிதையை வியந்தவாறு, கோப்பை மதுவைச் சுவைத்தவாறு, நயமான உரையாடலை வளர்த்தவாறு கவர்ச்சி நிறைந்த மங்கையின் அருகே அவளோடு நெருங்கி உட்கார்ந்திருப்பது அவனது வாழ்வின் இனிய கணங்களில் சுவை மிகச் சேர்க்கும். இசையும் நாடகமும் நாட்டியமும் பிறவும் உணர்வுகளைக் கிளர்வுறச் செய்ய, ஆனந்த அனுபவத்தை உயர்ந்த நிலைக்கு எவ்விட வைக்கத்தான். இவைகள் இன்ப முன்னுரைகள். தனிப்பெரும் ஆனந்தமான சதை இன்பத் துக்குப் பணிபுரியும் ஏவல் தெய்வங்கள்.

இன்பக் கலையிலே அவன் ஈடு இணையற்ற மன்னனாக திகழ்ந்தான். இந்த இத்தாலியனுக்குப் போட்டி போல - சமநிலையில் நிற்கக் கூடியவன்போல - விளங்கியவன் ஸ்பெயின் நாட்டினான டான்.ஜூவான். ஆனாலும் அவனது நோக்கமும் கொள்கைகளும், வெற்றிப்பெருமைகளும் காஸனோவாவின் போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

இலக்கியச் சிறப்பு பெற்ற இவ்விருவரையும் ஒரு வரலாற்று ஆசிரியன் வெகு அழகாக ஒப்புநோக்கி எழுதியிருக்கிறான்.