பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வல்லிக்கண்ணன்

கல்கி சரித்திர நாவலைப் பிரபலப்படுத்தவதற்கு முன்னரே தமிழில் சரித்திர நாவலும் சரித்திரக் கதைகளும் காலூன்றி மெது மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாட்டு மக்களிடையே தேசபக்தி, வீர உணர்வு, எதிர்த்துப் போராடும் பண்பு முதலியவைகளை வளர்க்கவும் முயன்றார்கள். அதற்காக எழுத்தின் பல வடிவங்களையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள். கதை, நாவல், நாடகம் முதலியன இந்த நோக்கத்துக்கு நன்கு உதவக்கூடும் என்று கருதினார்கள்.

சிறுகதைக்கு இலக்கிய வடிவம் கொடுத்தவர் என்று போற்றப்படுகிற வ.வே.சு. ஐயர் கதைகளின் மூலம் மக்களுக்கு வீர உணர்வைப் புகட்ட வேண்டும், அதற்காக வரலாற்றுப் புகழ் பெற்ற வீரர்களின் கதைகளை ரசமான முறையில் எடுத்தெழுத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அவ்வகையில் அவர் சில கதைகளும் எழுதினார்.

பிரஞ்சு நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகத் தன் உயிரை ஈந்த வீரன் அழேன் ழக்கே கதை வ.வே.சு.ஐயர் கதை களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று ஆகும். இந்திய வரலாற்றில் கீர்த்தி பெற்றுள்ள சந்திரகுப்தனை ஆதாரமாக்கியும் அவர் கதைகள் புனைந்தார்.

விடுதலைப்போராட்டம் விறுவிறுப்பு பெற்றிருந்த 1930களில் மொழி மறுமலர்ச்சியும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. அக் காலகட்டத்தில் இந்தியமொழிகள் பலவும் மறுமலர்ச்சி வேகம் பெற்று வளர்ச்சிப்பாதையில் சென்றன. தமிழிலும் மறுமலர்ச்சி போற்றத்தகுந்த விதத்தில் மணம் பரப்பலாயிற்று.

அந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்ச் சிறுகதை, இலக்கிய கனத்துடனும் பல்வேறு பரிமாணங்களுடனும் வளரத் தொடங் கியது. அப்போது சரித்திரக்கதைகளும் உரிய கவனிப்பைப் பெற்றிருந்தன.

வீரம், தன்மான உணர்வு, போராட்ட குணம், சுதந்திரப் போக்கு, தியாகம் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் சரித்திரக் கதைகள் பலரால் எழுதப்பட்டு, பத்திரிகைகளில் பிரசுரம் பெற்றன. எம்.எஸ். சுப்பிரமணியஐயர் எழுதிய இத்தகைய கதைகள் வாசகர் களால் அதிகம் ரசிக்கப்பட்டு வந்தன.

இத்தகைய சரித்திரக் கதைகளில், வரலாற்று அடிப்படை களைவிட உணர்ச்சி வேகமும் மிகுகற்பனையும் நடை அழகுமே மிகுதியாக இடம் பெற்றிருந்தன.

அவற்றைக் குறைகளாகக் கருதிய சிலர் சரித்திர உண்மை களை ஆதாரமாகக் கொண்டு கதைகள் எழுதினார்கள். அவர்