பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 129

காலையிலிருந்து நடைதான். காலையிலே ரெண்டு இட்டிலி சாப்பிட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தேன். நடந்து கொண்டே இருக்கேன். பத்துமைலுக்கு அதிகமாகவே நடந்திருப்பேன். இன்னும் நடக்க வேண்டியிருக்கு என்றான். .

அனுதாபத்தைத் துண்டும் விதத்தில் தோற்றம் பெற்றிருந்த அவன் டீ குடிக்க ஏதாவது கொடுங்களேன் என்று காசு கேட்ப தற்குத்தான் இப்படி அடிபோடுகிறான் என்று என் மனம் முணுமுணுத்தது.

பல சினிமா ஆக்டர்கள் வீடுகளைப் பார்த்தாச்சு. பத்மினி வீட்டைப்பார்க்கணும். அப்புறம் வாத்தியாரைப் பார்த்துப் பேசனும் அடையாறுலே அவரு ஸ்டுடியோ இருக்கு தாமே? அடையாறு இங்கிருந்து ரொம்பதுாரமா? என்று அவன் கேட்டான்.

அஞ்சு அல்லது ஆறு மைல் இருக்கும். அவ்வளவு தூரம் நடக்கணுமா? ஊம் பரவால்லே. வாத்தி யாரைப் பார்த்துப் பேசினால் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும். ஸ்டுடியோவில் அவரைப் பார்க்க முடியுமா?

எனக்குத் தெரியாது. அங்கே போய் முயற்சி செய்து பார்த்தால்தான் தெரியும் என்று சொன்னேன்.

போகத்தான் போறேன். எப்படியும் அவரைப் பார்த்துப் பேசத்தான் போறேன். அவன் திடநம்பிக்கையோடு பேசிக்கொண் டிருந்தான்.

அநேக வருஷங்களாக நம் நாட்டின் சாதாரண மக்களின் லட்சிய நாயக நாயகிகளாக சினிமா ஹீரோக்களும், ஹீரோயின் களும்தான் விளங்கி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளி லிருந்தும் அவர்களையும் அவர்கள் வசிக்கும் வீட்டையும் பார்ப்ப தற்காக எத்தனையோ பேர் தலைநகரத்துக்கு வருகிறார்கள். பார்க்கப் போனால் எல்லா நாட்டு சாதாரண ஜனங்களும் இப்படித்தான் இருப்பார்கள். டாக்டர் சஞ்சீவியின் நினைவுகள் என்ற புத்தகத்தில் அவர் இதுபோன்ற ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பதிக்குப் போய் வெங்கடாசலபதியைத் தரிசித்து மொட்டை போட்டுக் கொண்டு டுரிஸ்ட் பஸ்ஸில் சென்னைக்கு வருகிற ஆந்திர நாட்டு யாத்ரீகர்கள். அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய ஆந்திர சினிமா நடிகைகள். நடிகர்கள் வீடுகளைத் தேடிப்போய் அவர்களைத் தரிசித்து மகிழ்வது வழக்கம், பெரு மாளுக்கு அடுத்தபடியாக அவர்கள் அந்நடிகர்களை மதித்தார்கள் என்று அந்த டாக்டர் எழுதியிருக்கிறார். இப்பவும் இந்த வழக்கம் நீடித்து வருகிறது. திருப்பதி நெடுமாலைக் கும்பிட்டுவிட்டு

வ-8