பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - வல்லிக்கண்ணன் பட்டணம் பார்க்கவருகிற ஆந்திரநாட்டுப் பக்தர்கள். படங்களில் கிருஷ்ணர் வேஷம் போட்டுக் கவர்ச்சிகரமாக விளங்கியுள்ள ஒரு நடிகர் வீடு தேடிப்போய் அவரை விழுந்து கும்பிடுகிறார்கள் என்றொரு சேதி சில மாதங்களுக்குமுன்பு ஒரு பத்திரிகையில் வந்திருந்தது.

இவை என் மனசில் புரண்ட (எண்ண நினைவுஅலைகள். அவன் பேசிக்கொண்டிருந்தான். நான் திருவனந்தபுரத்தில் வேலை பார்த்தேன். அப்போ என் பேர் அச்சுதன் நாயர். பிறகு கொழும்புக்குப் போனேன். அங்கே புத்த தேவா என்று சில வருஷம் இருந்தேன். அப்புறம் பம்பாயில் வேலைபார்த்தேன். பிரான்சிஸ் என்று பேர். இப்போ கிருஷ்ணன். என்.எஸ். கிருஷ்ணன் சாதாரணமாயிருந்து பல வேலைகள் பார்த்துத் தான் சினிமாவுக்கு வந்தார். காரிலே போக முடிஞ்கது. வாத்தியாரும் சாதாரண நிலையிலிருந்துதான் உயர்ந்தி ருக்கிறார். பங்களாவாசம். பணம் எல்லாம் அடைய முடிஞ்சிருக்கு. இந்தக் கிருஷ்ணனும் சில வருஷங்களில் அப்படி வரத்தான் போறான். காரிலே இதே ரோடிலே போகத்தான் போறான். முதல்லே வாத்தியாரைக் கண்டுபேசனும் எனக்கு கத்திச்சண்டை தெரியும். கொழும்பிலே இருந்தப்ப கத்துக்கிட்டேன். பெரிய மாடியிலேயிருந்து ஜம்னு கீழே குதிப்பேன். ஒரு மொட்டை மாடியிலேயிருந்து ஒரு கிணத்துக்குள்ளே குதிச்சப்போதான் இந்தக் காயம் பட்டுது.

அவன் தன் கையையும் காலையும் அங்கே பதிந்திருந்த வடுக்களையும் காட்டினான்.

திடீரென்று அவன் பேச்சின் திசை மாறியது. இங்கேல்லாம் முடிவெட்டிக் கொள்ள என்ன கூலி என்று கேட்டான்.

ஒரு ரூபாய் ஐம்பது பைசா? ஒண்ணரை ரூபாயா? ஷேவிங் மட்டும் என்றால்? முப்பது பைசா. மவுன்ட் ரோடு பக்கம் இன்னும் அதிகம் இருக்கும். இருக்கத்தான் வேண்டும்.

அவன் தன் போக்கிலும் பேசிக்கொண்டிருக்கையில் என் மனம் நினைவு அசை போட்டது.

ஒரு சலூனில் புதிசாக என் பார்வையை உறுத்தின இரண்டு பெட்டிகள். ஒன்றின்மீது ஷாம்பு அன்ட் ஏர்டிரையிங் ஒரு ரூபாய் ஐம்பது பைசா என்றும் மற்றொன்றில் ஃபேஸ்மாசேஜ் 50 பைசா ன்றும் ஆங்கிலத்தில் அழகாகப் பொறிக்கப் பட்டிருந்தது. இது