பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 13?

என்ன என்று விசாரித்தேன். ஷேவ் செய்து கொண்டபிறகு. முகத்தில் சுருக்கம் இல்லாமல் மழமழப்பு உண்டாக்கிவிட எலெக்ட்ரிக் மாசேஜ் செய்யலாம். ஹேர் கட்டிங் பண்ணிவிட்டு, குளிக்காமல் ஜம்னு சினிமாவுக்கோ வேறு எங்கோ போக விரும்பு கிறவங்க ஷாம்பு செய்துகொண்டு ஏர்டிரையிங் பண்ணிக் கொள்ள இது உதவும். இங்கே திருவல்லிக்கேணி ஏரியாவிலே இதுகளுக்கு மதிப்பு இல்லே. மவுண்ட் ரோடிலே, இந்த ஸலுான் இருந்தால் இவைகளுக்கு எப்பவும் வேலை இருந்துகொண்டே இருக்கும். பணமும் வரும் என்று முடிவெட்டும் தோழன் விளக்கினான்.

கிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தான்.

நான் ஜோரா ஹேர்கட் பண்ணுவேன். வேகமாகவும் செய்வேன். தினசரி பத்துப்பேருக்கு முடிவெட்டினாலே பதினஞ்சு ரூபா கிடைச்சுப்போகும். ஷேவிங் பண்ணினால் அதிகப்படி வருமானம். நான் சலூன்வேலைதான் பார்த்தேன். ஒரு நாளைக்கு மூனரை ரூபா சம்பளம். நின்னுக்கிட்டே உழைக்கணும். அது தான் கஷ்டம். நான் வாத்தியார்கிட்டே பேசப்போறேன். அவரு எனக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தருவாரு பேரை மாற்றிக் கொள்வேன். அப்புறம் பாருங்க. ஆனந்த் தியேட்டர் பக்கம் உள்ள ஒரு சலுனை விலைக்கு வாங்கி, பெரிசு பண்ணி ஏர் டிரையர் மாசேஜ் மிஷின் எல்லாம் வச்சு, நாலைஞ்சு ஆட்களை வேலைக்குப் போட்டு, ஆ அந்தக் காலம் விரைவாக வந்து கொண்டிருக்குது.

தன் கனவுச் சுகத்தில் தானே சொக்கிப்போய் சும்மா யிருந்தான் அவன் - ஒரு கணம்.

இதெல்லாம் நடக்காதுன்னு நெனைக்கிறீங்களா? நிச்சயமா நடக்கத்தான் போகுது. நான் தமிழகஅரசு பரிசுச்சீட்டுகூட வாங்கியிருக்கிறேன். எனக்குப் பரிசு கிடைக்கும் தான். எங்க ஆள் ஒருவருக்கு லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. அது மாதிரி எனக்குக் கிடைக்கும். அது கிடைத்ததும், ஒடியன் தியேட்டர் பக்கம். எழுபதினாயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு இருக்கிற ஒரு சலுரனை விலைக்கு வாங்கி பிசினலை வளர்க்கலாம்னு எண்ணம்.

முதல்லே அடையாறு போகணும். வாத்தியாரைப் பார்த்துப் பேசணும். அவரைப் பார்த்துப் பேசிட்டாலே, எனக்கு அதிர்ஷ்டம் வந்தாச்சுன்னுதான் அர்த்தம்.

சரி, எனக்கு நேரமாச்சு நான் போறேன். சில கஜதுரரம் நடந்திருப்பேன். ஸார். ஸார் என்று அவன் கூப்பிட்ட குரல் என்னைத் திரும்பிப்பார்க்க வைத்தது. காசு கேட்கத்தான் கூப்பிடு வான் என்ற நினைப்புடன் நின்று திரும்பி அவன் பக்கம் பார்த்தேன்.