பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் #33 பொழுதுபோக்குக்காக நாடகக்கலைஞர் மன அரிப்பைத் தீர்க்க நாடகங்களை எழுதிக் குவிக்கும் ஆசிரியர். கனவினால் சினிமா நடிகர். லட்சியம், பட்டணத்தில் வசதியான ஒரு வீடும் சுகபோக வாழ்வும். பார்க்கப்போனால் பெரும்பாலான மத்தியதரவர்க்கத்து ஆசாமிகளின் ஆசையும் கனவும் இப்படியே இருப்பது புரியும்.

ஸார். எத்தனை காலத்துக்கு நம்ம சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை வீட்டுக்காரனுக்கு வாடகையாகக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பது.? நமக்கென்று ஒரு வீடு கட்டியாக வேண்டும். இந்த எண்ணம் எனக்குள் வளர்கிறது. சில வருஷங்களுக்குமுன் நடிக்க வந்த அவன் பெரிய வீடு கட்டிப் போட்டான். இவன் ஜோரான பங்களா கட்டிவிட்டான்.

சினிமா நாடக உலக நபர்களின் பெயர்களைக் கூறி அவர் களது வீடுகள் பற்றிய விவரங்களையும் சொல்லலானார் நண்பர். அவருக்கு நடுத்தெரு, பஜார் பிளாட்பாரம். ஒட்டல் முன்பு சினிமா தியேட்டர் ஒரம் என்கிற கவலை எதுவும் எப்பவுமே கிடையாது. எங்கே எந்த நேரத்தில் சந்தித்தாலும் சரி. அங்கேயே அசையாது நின்று தன் எண்ணங்களை உரத்த குரலில் பேச ஆரம்பித்து விடுவார். இப்பவும் அப்படித்தான்.

நானும் வசதிகள் நிறைந்த ஒரு வீடு கட்டியாக வேண்டும். அதற்குப் பணம் சம்பாதித்தாக வேண்டும். பணத்தை வேகமாக நிறையவும் சம்பாதிக்க ஒருவழி சினிமாவில் நடிப்பது தான். நான் அதுக்குத்தான் முயற்சி பண்ணி வருகிறேன். பல நடிகர்களை சந்தித்துச் சொல்லி வைத்திருக்கிறேன். தினசரி இதுவும் ஒரு முக்கிய வேலை ஆகிவிட்டது, நமக்கு விரைவில் நான் சினிமாவில் நடித்து பணம் பெற்று சொந்தவீடு கட்டி விடுவேன். இந்த நம்பிக்கை எனக்கு இருக்கு லார் என்று உறுதி கனத்த குரலில் சொன்னார் நண்பர்.

வாழ்க உங்கள் நம்பிக்கை. உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் என்றேன். -

பெரியவாள் ஆசீர்வாதம் என்று பணிவாகக் கும்பிட்டார் மிஸ்டர் ராவ்ஜி,

நான் பெரியவாளும் இல்லை. சின்னவாளும் இல்லை. நானும் சாதாரண மனிதன்தான் என்று சொல்லி வைத்தேன். தமிழக அரசுப் பரிசுச்சீட்டு வாங்கினீர்களா?” என்றும் கேட்டேன். வாங்காமல் இருப்பேனா? ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொரு சீட்டு வாங்கத்தான் செய்கிறேன். ஒரு ரூபாய் செலவில் லட்சாதிபதி ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறபோது அதைப் பயன்படுத்தாமல்