பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 வல்விக்கண்ணன்

விட்டுவிட முடியுமா? எப்படியும் எனக்குப் பணம் வந்தாக வேண்டும். நானும் சொந்தமாக ஒரு வீடு கட்டி அதில் வசதியாக வாழவேண்டும். அந்த நாடகக் கலைஞர் நாலைந்து வீடுகள் கட்டி வாடகைக்குவிட்டு சுகமாக வாழ்கிறார். இந்த நாடக முதலாளி இரண்டு பங்களா கட்டிக் கொண்டிருக்கிறார். மீண்டும் அதே பாடம் ஒப்புவிப்பு. உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களோடு சிறிது நேரம் பேசமுடிந்ததில் எனக்கு நல்ல மனநிறைவு. ஏற்பட்டிருக்கிறது. லார் என்று கூறிப் பெரிதான ஒரு கும்பிடு போட்டு நகர்ந்தார் ராவ்ஜி,

எனது நினைவுகளும் நானுமாய் நான் என் வழியே நடக்க லானேன்.

ஒரு இடத்தில் பெரும் கும்பல். விலகிநின்ற என் நண்பர் சிவராமன் சிரித்தபடி என்னை நோக்கிவந்தார். லாட்டரி டிக்கட்டுக்குத்தான் கூட்டம். நானும் அதுக்காகத்தான் காத்து நிற்கிறேன். இது வரவர ஒரு சூதாட்டம் ஆகிவிட்டது. இருபது முப்பது நாற்பதுன்னு சீட்டுகள் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனாலேதான் இவ்வளவு டிமாண்டு. ஒரு வரிசைக்கு ஒரு சீட்டு என்று வைத்துக்கொள்வதில் அர்த்தம் இருக்கு. நான் அப்படித் தான் வாங்குகிறேன் என்றார்.

தானாகவே சிரித்துக்கொண்டார். தொடர்ந்து பேசினார். நீங்ககூட ஒன்று அல்லது இரண்டு சீட்டு வாங்கி வையுங்கள். லட்சம் ரூபாய் கிடைக்காவிட்டாலும் பத்தாயிரம் கிடைக்கலாம். இல்லை வெறும் ஆயிரம்தான் கிடைக்கட்டுமே! நம்மாலே ஆயிரம் ரூபாய் மொத்தமாக இந்த வாழ்க்கையிலே சேர்த்துவிடமுடியுமா என்ன? முடியாது நான் சொல்றேன் - நிச்சயமா முடியாது. ஆஃப்டர் ஆல் ஒரு ரூபா. ஒருவேளை டி.பன் செலவு. அதுக்கு ஒரு தாள். அது ஒரு லட்சம் அல்லது பத்தாயிரம் அல்லது ஆயிரம் ரூபாயை அலால்ட்டா கொண்டுதரும். இது ஏதோ மாயம் மாதிரி இல்லே? அல்லாவுதீன் மோதிரம், அற்புத விளக்கு. புதையல் என்கிற மாதிரி எல்லாம் இல்லே? எப்படி இருந்தால் என்ன, யாராவது லட்சாதிபதியாவது நிச்சயம். பெரும் பணம் சுலபமாகப் பெறப்போவது உண்மை. அது நாமாக ஏன் இருக்கக் கூடாது? பணம் யாருக்குத்தான் தேவை இல்லை? கஷ்டப் படாமல் சுலபமாக லட்சாதிபதியாக அல்லது பெரும் பணக்கார னாக மாற வழி ஏற்பட்டிருக்கு என்றால் அப்புறம் கஷ்டப்பட்டு உழைத்து அவதிப்படுவதில் அர்த்தமும் இல்லை. சுகமும் இல்லை. அதனாலேதான் நான் தமிழகஅரசுப் பரிசுச் சீட்டுகளோடு கேரளா,