பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லை மாவட்ட நூல்களைப் பிரசுரிக்க மித்ர வெளியீடு ஒரு திட்டத்தினை வகுத்துச் செயலாற்றுகின்றது. அவர்களுடைய இலக்கிய முயற்சிகளிலே இணைந்து கொள்ளும் ஆர்வத்தினை நாம் வெளிப்படுத்தினோம். அத்திட்டத்தின் கீழ் எங்களையும் இரண்டு நூல்களை வெளியிட அனுமதி தந்தார்கள். அவற்றுள் ஒன்று வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.

இன்றையத் தமிழ் இலக்கிய உலகில் பிதாமகர் என்றும் பீஷ்மர் என்றும் வாஞ்சையுடன் அழைக்கப் படுவதற்கு வல்லிக்கண்ணன் இவர் முற்றிலும் தகுதி யுள்ளவர். 85 வயதான இளைஞர். நைட்டிகன். 72 வருட இலக்கிய வாழ்க்கை. சிறுகதை, நாவல் குறுநாவல், கட்டுரை, கவிதை, வாழ்க்கை வரலாறு, நாடகம், கடிதங்கள், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளிலும் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளார்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலுக்காக இந்திய சாகித்திய அகாதமிப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பரிசு எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும் நூலுக்கு அளிக்கப்பட்டது. அக்னி அக்ஷ விருது, ஆழ்வார்கள் ஆய்வு மையம் விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது மற்றும் பல இலக்கிய அமைப்புகளின் தமிழ்ப்பணி விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

இவர் இலக்கியப் பணிகள் தொடர என்றும் என் வாழ்த்துக்கள்.

- எஸ். பொன்னுத்துரை