பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 வல்லிக்கண்ணன்

டையே எடுத்துச் செல்லவும் நாடு நெடுகிலும் புதிய பத்திரிகைகள் தோன்றி வளரக் காந்தியம் துணைபுரிந்தது. இலக்கிய மறுமலர்ச்சிக்கு இந்த வேகம் வித்திட்டது.

நாட்டு மக்களின் வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்த காந்தியத் தத்துவம் இலக்கியத்திலும் தனது தாக்கத்தைப் பரவச் செய்தது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல் முதலிய பல்வேறு இலக்கியவடிவங்களிலும் 1920கள் முதல் காந்தியத் தாக்கம் நன்கு புலனாயிற்று.

அக்காலகட்டத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட சிறுகதை களும் நாவல்களும் காந்தியக் கொள்கைகளைப் பிரதிபலித்தன. விடுதலைப்போரில் ஈடுபடும் கதை மாந்தர்கள், சுதந்திரத்தின் சிறப்பைப் பேசுகிறவர்கள். உண்மை பேசுவதும் உண்மையைக் கடைப்பிடிப்பதும் வாழ்க்கையின் உயர்ந்தநெறியாகும் என்று தேர்ந்து செயலாற்றியவர்கள். அகிம்சை போற்றியவர்கள் பற்றி, கதைகளும் நாவல்களும் தோன்றின. கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழிப்பு, கதர் அணிதல், அந்நியத் துணி மறுப்பு, சத்தியாக்கிரகம் முதலிய காந்தியக்கொள்கைகளை அவை வலியுறுத்தின.

கா. சீ. வேங்கடரமணி எழுதிய முருகன் ஒர் உழவன் ‘தேசபக்தன் கந்தன் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் தியாகபூமி', வை. மு. கோதைநாயகி எழுதிய பல நாவல்கள் காந்தியத் தாக்கம் பெற்ற படைப்புகள் ஆகும்.

இவ்ஆசிரியர்கள் அளவு பெயரும், அவர்களது எழுத்துக்கள் பெற்ற வரவேற்பும் பெற்றிராத எழுத்தாளர்கள் அநேகர் காந்தியத் தாக்கம் பெற்று நாவல்கள் எழுதியுள்ளனர் என்பதை வரலாறு உணர்த்தும்.

1926ல் வெளிவந்த 'காந்திமதி என்ற நாவல்தான் காந்தியத் தாக்கம் பெற்ற முதல் நாவல் என்றொரு தகவல் தெரிவிக்கிறது. இல்லை. 1922 - ல் வெளிவந்த சபேசன் அல்லது சுதந்திர ரக்ஷகன்' என்ற நாவலிலேயே காந்தியத்தாக்கம் வெளிப்பட்டிருப்பதை அறிய முடிகிறது எனக் கூறுவோரும் உளர். -

வை. மு. கோதைநாயகி அம்மாள், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புதுமை இலட்சியங்களையும் உரிமைப்போராட்டங்கள் இயக்கங்களையும் கலந்து நாவல்கள் படைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் என்பதை நாவல் வாசகர்கள் அறிவர். சூதாட்டம், குடி போன்ற சமூகத் தீமைகளால் குடுமபங்கள் கெட்டுச் சீரழிவது, பெண்கள் படுகிற துன்பதுயரங்கள் முதலியவற்றை அவர் நாவல்களில் சித்திரித்தார். காந்திய வழிமுறைகளைப் பின்பற்றும் பெண்கள் தங்கள் கணவன்மாரைத்