பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[邮画

இந்தியநாட்டில் காலகாலமாக நிலவி வரும் சமூகம் மற்றும் சனாதனக்கொடுமை களையும், வறுமையையும் பிற்போக்குத் தனங் களையும் எதிர்த்து இலக்கியப்போர் தொடுத்த பேனாவீரர் பிரேம்சந்த், உருதுமொழியிலும், இந்தியிலும் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிப் புகழ்பெற்ற பிரேம்சந்த் இந்திய முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும் முன்னோடி யாகவும் கருதப்படுகிறார்.

கற்பனை அலங்காரம, மர்மம், சரித்திர மோகம் முதலிய அம்சங்களே நிறைந்து கிடந்த உருது, இந்திமொழிகளின் படைப்பிலக்கியத்தில் புதிய ஒளியைப் புகுத்திய பெருமை பிரேம் சந்தையே சேரும். அவரது காலத்தில் சமூக நிலைமைகளையும், காலவேகத்தில் நாட்டிலும் சமுதாயத்திலும் குடும்பங்களிலும் ஏற்பட்டு வளர்ந்த மாறுதல்களையும் அவர் தமது நாவல் களில் நன்கு எடுத்துக்காட்டினார். கிராமங் களின் அவல நிலைமைகளையும் நகரவாழ்வின் பொய்மையையும் போலித்தனங்களையும் பிரேம்சந்த் தமது எழுத்துக்களில் படம்பிடித்து இலக்கியத்தில் எதார்த்தத் தன்மையைக் கலந்தார்.

பிரேம்சந்த் சிறந்த மனிதாபிமானி.

م

  • }

த்