பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 25

திருப்தியின்றி வாழ்கிறாள். மகளின் கல்யாணத்துக்காக, தந்தை தவறு செய்கிறார். கைதாகி, சிறைத் தண்டனை அடைகிறார்.

கதாநாயகி, ஒரு சிறு தவறுக்காக, புருஷனால் வீட்டை விட்டு வெளியே தள்ளப்படுகிறாள். சிநேகிதி வீட்டில் இரவு நேரத்தைக் கழிக்க அவள் முயற்சிக்கிறாள். அங்கும் இடம் கிடைக்க வில்லை. தாசி ஒருத்தி அவளுக்குப் புகலிடம் தருகிறாள். இதன் விளைவாக அவள் தனது சமூகமதிப்பை இழக்கிறாள். தவறுகள் செய்கிறாள்.

அவள் திருந்தி தனது மதிப்பைப் பெறுவதற்கு எவ்வளவு முயற்சிகள் செய்தும் பலனில்லாது போகிறது. தாசிக்குப் பணமும் மதிப்பும் அளிக்கிற சமூகப்பெரியவர்களும் சனாதனிகளும் அவளை வெறுத்து அவமதிக்கிறார்கள். முடிவில் அவள், ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயத்தில் உண்மையாக உழைத்து உயர்வாக வாழ வகைசெய்யும் ஒரு அமைப்பு முறையில் - தனது துயரங்களுக்கு மாற்று கண்டு சுகம் அடைகிறாள்.

இந்நாவலில், சமூகநிலைமைகளைத் தெளிவாக விவரிக்கும் பிரேம்சந்த் தமது கதைமாந்தரை அனுதாபத்துடன் கவனித்து, அவர்களுடைய வீழ்ச்சிகளை அக்கறையோடு சித்திரிப்பதை வாசகர் உணரமுடியும்.

ஆயினும், பிரேம்சந்தின் நாவல்கள் சரத்சந்திரர் படைப்பு களைப் போல் படிப்பவரின் உள்ளத்தைத் தொடக் கூடியவை அல்ல, தாகூரின் நாவல்கள் போல் தனிஅழகும் இனிமையும் கொண்டன அல்ல என்ற குறையும் வாசகர்களிடையே எழுவது உண்டு.

சரத்சந்திரர் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். மென்மையான உறவுகளுக்கும், அவ்உறவுத் தொடர்பு களினாலும் சிக்கல்களினாலும் பாதிக்கப்படும் துண் உணர்வு களுக்கும் தனது நாவல்களில் பெரும் இடம் அளித்தார். கவிஞரான தாகூர் அழகியலுக்கும் கற்பனை நயத்துக்கும் ஆன்மீக உணர்வு களுக்கும் பிரதானம் கொடுத்து நாவல்கள் எழுதினார். ஆனால் பிரேம்சந்த், மண்ணின் மக்களைப் பற்றி, அவர்களுக்கே உரித்தான குணநலன்கள் குறைபாடுகளைப் பற்றி எழுதியதோடு, சமூகத் தையும் வாழ்க்கை அவலங்களையும் எதிர்த்து எழும் மனிதரின் போராட்டங்களையும், போராடும் சக்திகளைக் குறித்தும் எழுதினார்.

பிரேம்சந்தே குறிப்பிட்டிருக்கிறார்: நான் மென்மையான உணர்வுகளைப் பெரிதுபடுத்தவில்லை. போராட்டங்களையே சித்திரிக்கிறேன். மனிதர் எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற் காகவேதான் எழுதுகிறேன். ஆகவே என் எழுத்துக்கள் கடுமையாகத் தான் இருக்கும்.