பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வல்லிக்கண்ணன்

மகாத்மாகாந்தியின் போராட்ட இயக்கங்களும், இந்திய மக்களின் தேசிய விடுதலை எழுச்சியும், அவரை வெகுவாக பாதித்தன. இவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரேமாசிரமம் என்ற நாவலை அவர் எழுதினார்.

லட்சியமனிதனைப் பற்றிய அவருடைய உருவகம் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளது. இதன் கதாநாயகனான பிரேம் சங்கர் பொறுமைசாலி. வாழ்வு நெடுகத் துயருறுகிறவன். ஆனால், அநியாயத்தை எதிர்கொள்கையில் எஃகு போல் உறுதியாக நின்று சமரிடுபவன். மிராசுதார் வர்க்கத்தைச் சேர்ந்தவன். எனினும், விவசாயிகளிடம் ஆழ்ந்த அனுதாபம் கொண்டவன். உயர்ந்த மனிதாபிமானி. நல்லமனிதன். அவன் நிறுவுகிற பிரேமாசிரமம் ஒரு லட்சிய அமைப்பு. அங்கே மண்ணை உழுது உழுது உழைக் கிறவர்கள் அதிலிருந்து வருவதைக்கொண்டு வளமான வாழ்வு வாழமுடிகிறது.

பிரேம்சந்தின் மற்றொரு பெரிய நாவலான ரங்கபூமி தனி ரகமான கதாநாயகனை அறிமுகப்படுத்துகிறது. ஒரு குருட்டுப் பிச்சைக்காரன். ஒடும்வண்டிகளின் பின்னே ஒடிஓடிப் பிச்சை ஏற்றுப்பிழைப்பவன். அசாதாரமான தன்மானம், தாராளமனம். உரிமைகளுக்காகப் போராடும் குணம் ஆகியவையையும் பெற்றி ருக்கிறான். வாழ்க்கையில் அறிந்திருந்த குருட்டுப் பிச்சைக்காரன் ஒருவனையும் இந்தியாவின் மகத்தான பக்கிரியாக விளங்கிய மகாத்மாகாந்தியையும் இணைத்து இந்தக் கதாபாத்திரத்தை, பிரேம்சந்த் உருவாக்கியுள்ளார் என்று கருதப்படுகிறது.

கிராம சமுதாயவாழ்வை, கிராமவாசிகளின் நீங்காத வறுமை யையும் துன்பங்களையும் பொறுமையையும் ரங்கபூமி நாவல் வர்ணிக்கிறது. மக்களின் வறுமைக்கும் சோகமயமான வாழ்வுக்கும் நிலஉடைமைக்காரர்களைப் போலவே, புதிதாகத் தொழிற் சாலைகள் அமைக்கும் பண அதிபர்களும் காரணஸ்தர்களாகி றார்கள். தொழில்துறையை விரிவுபடுத்தி இயந்திரமயப்படுத்துவதன் வாயிலாக உழைப்போரின் உழைப்புச் சுமை குறையும் என்பதை, பிரேம்சந்த் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. -

அவர் தமது நாவல்களின் மூலம், மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகிற சமூக அநியாயங்களை எடுத்துச்சொல்வதை விரும்பினார். அவ்வாறு சுட்டிக்காட்டுவதன் வாயிலாக அநியாயங் களை எதிர்க்கும் விழிப்பு:உணர்வை மக்கள் உள்ளத்தில் தூண்டி விட பிரேம்சந்த் ஆசைப்பட்டார் என்றே தோன்றுகிறது.

மண்ணகத்தில் நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும். இதுவே பிரேம்சந்தின் இதய ஒலியாக இருந்தது.

இவ்வளவு அதிகமான சுயநலமும், பொறாமையும்,