பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வல்லிக்கண்ணன்

அவமதிப்புகளுக்கு உள்ளாகி வந்தபோதிலும் தனது சுயத் தன்மையை இழக்காத தன்னுடைய விசால இதயத்தையும், பரந்த நோக்கையும் இழந்துவிடாத மாண்பு நிறைந்த உருவம். இந்நாவலில் பலவிதமான பாத்திரங்கள் - கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எங்கெங்கும் வேகமாகப் பரவுகிற சுரண்டல், சுயநலம், போராசை இவற்றை எதிர்க்கிற மனிதர்கள். தீமைகளை, கோளாறுகளை எதிர்த்துக் சமரிட்டுப் புதியஉலகம் படைக்கப் போராடுகிறவர்கள். இச்செயல் முறையில் தாங்களே மாறிவிடுகிறவர்கள் - மேன்மையாளர் களாகவும் புரட்சி வீரர்களாகவும் வளர்கிறவர்கள். ஆசிரியரின் லட்சிய வேகம் இந்நாவலில் நன்கு செயல்பட்டுள்ளது.

பிரேம்சந்த் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வ தற்காக, சில முயற்சிகளில் ஈடுபட்டதும் உண்டு. சொந்த அச்சகம் வைத்து நடத்தினார். பத்திரிகைகள் ஆரம்பித்தார். புத்தகப்பிரசுரம் செய்து பார்த்தார். கடைசியாக, சினிமாவுக்கு கதை வசனம் எழுதவும் போனார். ஆனால், எதுவும் சரிப்பட்டு வரவில்லை. நஷ்டங்களும் கஷ்டங்களும் அதிகரித்தன.

அவர் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியக் குறைவினாலும் அவதிப்பட்டார். பொருளாதாரத் தொல்லைகளினாலும் நீடித்த வயிற்றுநோய்களினாலும் மிகுந்த சிரமங்களை அனுபவித்த பிரேம் சந்த் 1936 அக்டோபரில் தமது 55வது வயதில் மரணமடைந்தார். கடைசிக்காலத்தில் அவர் எழுதிக்கொண்டிருந்த மங்கள சூத்திரம் என்ற நாவல் அரைகுறையாக நின்றுவிட்டது.

இந்தி நாவல், சிறுகதை இலக்கியத்தில் - அதன் மூலம் இந்தியஇலக்கியத்தில் - தனிப்பெரும் சுடராக ஒளிர்ந்த, ஒளிர்கிற போராட்ட வீரர் பிரேம்சந்தின் நூறாவது ஆண்டு எனும் சிறப்பை 1980 பெறுகிறது. இந்தியா மாண்புறுவதற்கு வகைசெய்த பெரி யோர்களில் பேனாவீரர் பிரேம்சந்தும் ஒருவர் ஆவார். சக்தி மிகுந்த அவருடைய எழுத்துக்கள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டட்டும்.

ళ్సీ