பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剑 வல்லிக்கண்ணன்

3

வருகிறது. 1920களில் வ.வே.சு. ஐயர் ரசனாபூர்வமான விமர்ச னத்தில் அக்கறை காட்டி, புதுமுறை விமர்சனத்தின் முன்னோடி யாய், சில முயற்சிகளைச் செய்துள்ளார்.

அதன்பிறகு கூட விமர்சனத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்ற உணர்வு எழுத்துலகில் ஏற்பட்டதில்லை. பண்டி தர்களும் பேராசிரியர்களும், திருக்குறள் பற்றியும், கம்பராமாயணம் பற்றியும், எப்பவாவது சங்ககாலப் பாடல்கள் பற்றியும், எழுது வதிலும் பேசுவதிலும்தான் உற்சாகம் காட்டி வந்தார்கள்.

எனவே, அன்றையப்படைப்பாளிகள் தமிழில் புதுமை இலக்கியம் படைப்பதுதான் முக்கியத் தேவையாகும் என்று கருதினார்கள். அவர்கள்கூட சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார்கள். எப்பவாவது ஒரங்கநாடகம் எழுதினார்கள். விமர்சனம் எழுதுவதற்குப் போதுமான நவீன படைப்பிலக்கிய முயற்சிகள் உருவாகவில்லை இன்னும் என்றே அவர்கள் கருதி னார்கள். இருப்பினும், தங்கள் பார்வைக்கு வந்த புத்தகங்கள் குறித்து, அவர்களில் சிலர் மதிப்புரை எழுதியதும் உண்டு.

மணிக்கொடி பத்திரிகை புத்தகமதிப்புரைக்குப் பல பக்கங் களை ஒதுக்கி வந்தது. புதுமைப்பித்தனும் புத்தக மதிப்புரை எழுதியிருக்கிறார். மதிப்புரை பற்றிய தனது கருத்தை விரிவான ஒரு கட்டுரையாகவும் அவர் எழுதியுள்ளார்.

மதிப்புரை என்றால் என்ன? என்று கேட்டுக்கொண்டு அவரே இவ்வாறு விளக்கம் தருகிறார்.

மதிப்புரை பொதுவாக இலக்கிய விசாரமான ஆராய்ச்சி அல்ல. ஒரு புதுப்புத்தகம் வந்திருக்கிறது. இது இன்ன மாதிரி எழுதப்பட்டிருக்கிறது என்று கண்டிருந்தால் போதும். ஆனால் இன்று வெளிவரும் புத்தகங்கள் எல்லாம் தம்மை ஒரு இலக்கிய மைல்கல் என மார்தட்டிக்கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட தொரு மயக்கநிலையைப் போக்கச் சற்றுக் காரமான கருத்துக்கள் வெளியிடப்படுவது குற்றமல்ல. மதிப்புரை எழுதுகிறவனிடம் எதிர்பார்க்க வேண்டியது ஒன்றுதான். நல்ல இலக்கியத்தைக் காணும்பொழுது அதைத் தெரிந்துகொள்ளவும், பரிச்சயம் செய்து வைக்கவும், அவனிடம் திராணி வேண்டும். அப்படியே போலியைக் காணும்போது யார் வந்து நெற்றிக்கண்ணைத் திறந்தாலும், அது போலி என்று சொல்லுவதற்கு நெஞ்சு அழுத்தம் வேண்டும்.

புதுமைப்பித்தன் கூறுகிற இந்தக் குணம் நேர்மையான விமர்சகனுக்குத் தேவையான ஒன்றுதான்.

புதுமைப்பித்தன், விமர்சனம் என்று முறையாக எதுவும் எழுதவில்லை என்றாலும், பொதுவாகக் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறபோது துணிச்சலோடு தனது அபிப்பிராயத்தை ஓங்கி அடிக்கத் தவறியதில்லை.