பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வல்லிக்கண்ணன்

மாக இருக்கலாம். அது கதையின் ரசனைச்சுவையைக் குறைக்கிறது என்பதில் தடையில்லை.

பத்மாவதி சரித்திரம் பற்றிய புதுமைப்பித்தன் கருத்தும் நேர்மையான விமர்சனமேயாகும். அவர் சொல்வது:

மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்திற்கும் தமிழ்நாவலில் இரண்டாவது ஸ்தானம்தான் கிடைக்கும். மாதவையா தமது கதையில் தமிழ்நாட்டில் இருபது முப்பது வருடங்களுக்குமுன் இருந்த கிராம, பட்டின வாழ்க்கையை மிகவும் திறமையாகச் சித்திரித்திருக்கிறார். இருந்தாலும் அவருடைய இலக்கியங்கள் யாவும் பிரசார மனப்பான்மையில் எழுந்தவையாதலின், அதிலும் பிரசாரத்தின் அமுலின் கீழ்தான் கதையின் போக்கு இருந்து வருவதாலும், கதாபாத்திரங்கள் அவ்வளவு திறமையுடன் சித்திரிக்கப் படவில்லையாதலினாலும், அந்த நாவலை அவ்வளவு உயர்வாகச் சொல்லமுடியாது. இந்த வகுப்பில் மைதிலி, திக்கற்ற இருகுழந்தைகள், பொற்றொடி என்பவைகள் எல்லாம் இடம் பெறும். இவையாவும் தமிழ்நாவல்களின் வளர்ச்சியின் மைல் களாகக் கொள்ளலாமேயன்றி பூரணவளர்ச்சியைப் பெற்ற தமிழ் நாவலின் இலக்கியமாக ஒன்றையும் கூற முடியாது.

ஆரம்பகாலத் தமிழ்நாவல்கள் குறித்த புதுமைப்பித்தனின் கருத்துக்கள் இலக்கியரசிகர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கன வாகவே இருக்கின்றன.

தமிழ்ச் சிறுகதைகள் குறித்து, புதுமைப்பித்தன் உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். அவருடைய கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. அவர் எழுதியிருப்பது:

சிறுகதைகள் தமிழில் அற்புதமாக அமைந்திருக்கின்றன. நான் படித்த பழைய கதைகளில் கண்ணன் பெருந்துது என்ற கதை தமிழ்ச் சிறுகதைகளின் இலட்சியம் என்றே கூறலாம். அதன் அமைப்பு வெகுஅற்புதமாக விழுந்திருக்கிறது. குசிகர் குட்டிக் கதைகள் என்பவைகளைச் சிறுகதை என்ற ஹோதாவில் நாம் கவனித்தால் அதற்கு அவ்வளவாக ஒரு பெரிய ஸ்தானம் கொடுக்கமுடியாது.

வ.வே.சு. அய்யரின் கதைகள் தமிழிலேயே எந்த நாட்டு நாகரீகத்தையும் உணர்ச்சியையும் சித்தரிக்கலாம். தற்காலத்து நாவலாசிரியர்கள் என்று சம்பிரதாயமாகக் கூறப்படும் மொழி பெயர்ப்பாசிரியர்களுடைய தமிழுடையணிந்த வெள்ளைக்காரக் கதாபாத்திரங்கள் சித்தரிப்பது அனாவசியம் என்று எடுத்துக் காட்டும் ஒரு அளவுகோலாக இருக்கிறது. அவருடைய லைலா மஜ்னு, எதிரொலியாள், அழேன் ழக்கே முதலிய கதைகளில் அன்னிய நாட்டுக் கதாபாத்திரங்கள் மிகவும் திறமையாகச்