பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 33 சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அய்யரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவைகள். அவர் தமது சிருஷ்டி களில் மனிதனின் மேதையை, தெய்வீகத் துயரத்தை வீரத்தைக் காண்பிப்பதில் களித்தார். இலட்சியத்தை சிருஷ்டிப்பதில் லயித்தது அவர் உள்ளம்.

வ.வே.சு.அய்யரின் கதைகள் பற்றிய புதுமைப்பித்தன் அபிப்பிராயம் இன்றைய விமர்சகர்களுக்கு உடன்பாடானது அல்ல. அய்யரின் கதைகள் அனைத்தும் சிறந்த கதைகள் என்று இலக்கிய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழ்ச் சிறு கதைக்கு இலக்கியவடிவம் கொடுத்தவர். புதிய சோதனை ரீதியான கதைகள் எழுதியவர் என்ற பெருமை அய்யரைச் சேரும்.

புதுமைப்பித்தன் தனது காலத்தில் சிறுகதைப்படைப்பில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவரது சமகாலப் படைப்பாளிகளின் திறமையையும் மதிப்பிட்டுக் கருத்து தெரிவித்திருக்கிறார். அது வரலாற்றுரீதியில் சிறுகதையின் வளர்ச்சிப் பாதையைச் சுட்டிக் காட்டுகிறது.

மனிதனின் சிறுமைகளை, தப்பிதங்களை, அதில் அவன் நாடும் வெற்றியை, இலக்கியமாக சிருஷ்டிப்பதற்கு, நல்லகலைத் திறமையுடன் சிருஷ்டிப்பதற்கு வெகுகாலம் சென்றது. தமிழுக்கு விமோசனம் கிடையாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், வெள்ளி முளைத்தாற்போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. இந்த எழுத்தாளர்களின் கற்பனை களில் யாவும் இடம் பெறுகின்றன. இவர்களுடைய எழுத்துத் திறமையின் நிரந்தர வாழ்வைப் பற்றி வருங்காலந்தான் கூற வேண்டும். -

ஆனால் இவர்களுக்குள் இரண்டு மூன்று பேர்களின் எழுத்துக்கள் சாகாத எழுத்துக்கள் என்று கூறலாம். நட்சத்திரக் குழந்தையின் ஆசிரியரும் விஜயதசமி என்ற கதையின் ஆசிரியரும் தமிழ்நாட்டின் கற்பனைப் பொக்கிஷங்கள் என்று கூறவேண்டும். இருவருடைய கலையுணர்ச்சியும் சிருஷ்டித்திறனும் இவர்களை எழுத்தாளர்களின் விதிவிலக்காக்குகிறது.

புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ள நட்சத்திரக் குழந்தை என்ற கதையின் ஆசிரியர் பி.எஸ்.ராமையா. விஜயதசமி எனும் கதையின் ஆசிரியர் ந. பிச்சமூர்த்தி.

மற்றொரு இடத்தில், தமிழிலே நட்சத்திரக் குழந்தைகள், சிவசைலம், எங்கிருந்தோ வந்தான், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கதைகள் ஒப்புயர்வற்றவை என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதைகளை

வ-2