பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வல்லிக்கண்ணன்

எழுதியவர்கள் முறையே பி.எஸ். ராமையா. த.நா. குமாரஸ்வாமி, மெளனி, புதுமைப்பித்தன் ஆகியோர்.

மெளனியின் திறமையையும், அவரது எழுத்தின் தனித் தன்மையையும் முதன்முதலில் எடுத்துக்காட்டியவர் புதுமைப் பித்தனேயாவார்.

தமிழ்மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால், மெளனி என்ற புனைபெயரில் எழுதி வருபவரைத் தான் குறிப்பிட வேண்டும். அவரைத் தமிழ்ச்சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவரே என்பது புதுமைப் பித்தனின் மதிப்பீடு.

புதுமைப்பித்தன் நல்ல கவிதைப்படைப்புகளை வெகுவாக ரசித்திருக்கிறார். அவர் படித்து ரசித்த தனிப்பாடல்கள், கம்பன் கவிதை, பாரதியார் - பாரதிதாசன் கவிதைகள் பற்றி எல்லாம் கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிதையின் தன்மை குறித்தும் அங்கங்கே தனது கருத்துக்களை அவர் அழுத்தமாகக் கூறியிருக் கிறார்.

கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றிய ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றித் தமிழர் ஆராயவே இல்லை.

உடற்கூறுநூல் படியாவிட்டால் உயிர்வாழமுடியாதென்று சொல்லமுடியாது. அதைப்போல இலக்கணம் இல்லாவிட்டால் கவிதை இருக்க முடியாதென்று கூறமுடியாது. ஆனால் கவிதையை ரசிப்பதற்குக் கவிதை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்கமுடியாமல், எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப் படுவதற்குக் காரணம், அவர்கள் இலக்கியம் என்றால் என்ன வென்று அறியாததுதான் என்று அவர் கூறுகிறார்.

கவிதை நீதிகளை, தர்மங்களை, உயர்கொள்கைகளைப் போதிக்கவேண்டும் எனும் இலக்கிய நோக்கை, புதுமைப்பித்தன் ஆதரிக்கவில்லை. அக்கொள்கைளை அவர் கடுமையாக எதிர்த் துள்ளார்.

கவிதையைப் போதனைக்குரிய கருவியாக உபயோகப் படுத்தும்வரை அது கவிதையாக இருக்காது. அதன் ரசனை கெட்டு விடுகிறது. ஒழுக்கமோ தர்மமோ அல்லது மோட்சமோ இவற்றிற்காக