பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

3

சார்பாக அவன் உள்ளத்திலே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சியின் நாதந்தான் இலக்கியம்.

அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக இருக்கலாம். வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம். அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. அந்த சலனத்தின் பிரதிமையே இலக்கியம். இலக்கியத்தின் ஆதாரமே உணர்ச்சி தான் என்று புதுமைப்பித்தன் வலியுறுத்துகிறார்.

இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்மசாஸ்திரங்கள், வாழ்க்கையைக்கீழே இழுக்கும் பாறாங் கல்லுகள். காரணம், உண்மையே இலக்கியத்தின் இரகசியம் என்று அவர் அறுதியிட்டுக் கூறுகிறார்.

விமர்சனம் என்ற தன்மையில் இல்லாவிட்டாலும் சில உண்மைகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்துவதற்காக அவர் விமர்சனம் போன்ற கட்டுரைகள் சில எழுதியுள்ளார். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதைகள் சுயமான படைப்புகள் அல்ல, பிறமொழிக்கதைகளின் தழுவல்தான் என்று காட்டுவதற்காக, புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரைகளும், தமிழில் எழுதி வெளியிடப்பட்ட பில்கணன் நாடகம் (ஏ.எஸ். ஏ.சாமி எழுதியது சொந்தப்படைப்பு இல்லை. போலிப்பெருமை பெற உதவும் இரவல் சரக்குதான் என்று சுட்டுவதற்காக அவர் எழுதிய இரவல் விசிறிமடிப்பு என்ற கட்டுரையும் நல்ல உதாரணங்கள் ஆகும்.

தனக்கு உண்மை என்று தோன்றுகிற கருத்துக்களைத் துணிச்சலுடன், உரத்தகுரலில் எடுத்துச் சொல்லவேண்டும். மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ, இல்லையோ, தனக்குச் சரியென்றுபட்டதை ஓங்கி அடித்து (முரட்டடியாக சொல்லிவிட வேண்டும். இதுதான் புதுமைப்பித்தனின் விமர்சனக் கொள்கை.