பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தனின் புதுமைகள்

திமிழ்ச்சிறுகதை 1920-களில் நவீனத் தன்மையை அடையத் தொடங்கியது. வ.வே.சு. ஐயர்தான் தமிழ்ச் சிறுகதைக்குத் தற்காலத் தன்மையும் இலக்கிய வடிவமும் தந்தவர் ஆவார். அவர் ரீதிபுதிது என்ற இலக்கிய உணர்வோடு புதுத்தன்மை கொண்ட சிறுகதை களை எழுதினார்.

1930-களில் தமிழ்ச்சிறுகதை வேகமும் வனப்பும் பல்வேறு தனித்தன்மைகளும் பெற லாயிற்று. மணிக்கொடி எழுத்தாளர்கள் எனப் பின்னர் அறியப்பட்டவர்கள் அக்கால கட்டத்தில், வாழ்க்கையை அதன் சகல தன்மைகளிலும் இலக்கியத்தில் பதிவு செய்ய முனைந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் புதுமைப்பித்தன்.

1930 - களில் தலைகாட்டிய மறுமலர்ச்சிப் போக்கு குறித்து புதுமைப்பித்தன் இவ்வாறு எழுதியிருக்கிறார்: "ஒரு பேரலை எழுந்தது. அதில்தான் சிறுகதை தமிழில் பூரணவடிவம் பெற்றது. இதைச் சிறப்பாக மணிக்கொடியுகம் என்று சொல்லவேண்டும். இக்காலத்தில்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது. வாழ்வுக்குப்பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை, வாழ்வின் பல சூட்சமங்களையும்