பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வல்லிக்கண்ணன்

எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர்நின்று நோக்க ஆரம்பித்தன”.

மனிதனின் மேன்மைகளையும் உயர்ந்த பண்புகளையும் இலட்சியங்களையும் மட்டுமின்றி, அவனது குறைபாடுகளை, வக்கிரங்களை எல்லாம் மற்றும் மனிதசமூகத்தின் அவலங் களையும் அக்கிரமப்போக்குகளையும் கதைகளில் சித்திரிக்க வேண்டும் என்ற உணர்வு எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டது. உலக இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சிலர் தமிழ்ச் சிறுகதையையும் உலகஇலக்கியத்தின் தரத்துக்கு உயர்த்தவேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதினார்கள். அவர்களில் முதன்மை யானவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார்: “மனிதனின் சிறுமை களை, தப்பிதங்களை, அதில் அவன் நாடும் வெற்றியை, இலக்கிய மாக சிருஷ்டிப்பதற்கு வெகுகாலம் சென்றது. வெள்ளி முளைத்தாற் போன்று சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. இந்த எழுத்தாளர்களின் கற்பனைகளில் யாவும் இடம் பெறுகின்றன."

நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இல்லை என்று தேர்ந்து துணிந்து புதிய போக்கில் கதைகள் எழுதினார் புதுமைப்பித்தன். புதுமை வேகம், வாழ்க்கை பற்றிக் கூர்மையான பார்வை, தனித்தன்மை கொண்ட சிந்தனை நுட்பம், பாத்திரப் படைப்பு, கதைமாந்தரின் துணிச்சல், அபாரமான தன்னம்பிக்கை, கதைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள். அவற்றுக்குக்கலைவடிவம் கொடுத்த நேர்த்தி, ஈடு இணையில்லாத எழுத்தாற்றல், கையாண்ட நடை இவை காரண மாக புதுமைப்பித்தன்கதைகள், காலஓட்டத்திலும் புதுமைத் தன்மை குன்றாத தனிரகப்படைப்புகளாக விளங்குகின்றன.

மரபுரீதியான நிகழ்ச்சி அடுக்குகள் கொண்ட கதைகளைப் படித்துப் பழகிய வாசகர்களுக்கு, புதுமைப்பித்தன் கதைகள் புரட்சி கரமானவையாகவும் அதிர்ச்சி தரக்கூடியனவாகவும் இருந்தன. அநேகர் அவை புரியவில்லை என்றார்கள். அவர் கையாண்ட நடையும் சாதாரண வாசகர்களைச் சிரமப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

"கருத்தின் வேகத்தையே பிரதானமாகக்கொண்டு, வார்த்தை களை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதனால்