பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வல்லிக்கண்ணன்

ஒவ்வொரு நாளையும் ஒட்டுவதற்காக என்னென்னவோ செய்தும் பேசியும், தேடி வருகிறவர்களிடம் கடன் வாங்கியும் வாழ்கிற ஒருநாள்கழிந்தது எழுத்தாளர் வாழ்நாள் பூராவும் உழைத்தும் உயர்வடைய முடியாமல் அவதிப்பட்டு அல்லலுறும் தியாகமூர்த்தி ராமசாமிப்பத்தர், வாழ்க்கை முழுவதும் இல்லாமை யோடும் நோயாளி மனைவியோடும் உழன்று, மனைவிக்குத் தேவைப்படுகிற உதவிகளை எல்லாம் செய்து சிரமப்படும் செல்லம்மாள் பிரமநாயகம்பிள்ளை போன்றோர் வாழ்க்கையின் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் உயிர்ச் சித்திரங்கள்.

செல்லம்மாள் புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகளில் முக்கியமான ஒன்று. திறமையாக எழுதப்பட்டுள்ள வாழ்க்கைச் சித்திரம். சோகரசம் ததும்புவது. மத்தியதர வர்க்கத்தின் உழைப் பாளி மனிதனின் ஆசைகளையும் கனவுகளையும் ஏக்கங்களையும், வறுமைநிலையையும் உள்ளது உள்ளபடி கூறுகிற கதை அது.

ஆண், பெண் உறவுகளையும் உணர்வுகளையும் அடிப்படை யாக்கிப் புதுமைப்பித்தன் எழுதியுள்ள கதைகள் மரபு மீறலை அடிநாதமாகக் கொண்டிருக்கின்றன. விதவையை வைத்து அவரும் கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் பார்க்கிற கோணம் வேறு. வாடாமல்லிகை, வழி என்பன தனி ரகமானவை.

பொருந்தாத்திருமணம் விஷயத்திலும் பெண் பிறர் எதிர்ப் பார்க்கிறபடி நடந்துகொள்ள வேண்டும், என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அவள் நினைப்பும் போக்கும் தனித்தன்மை உடையதாக இருக்கவும்கூடும் என்று புதுமைப்பித்தன் உணர்த்து கிறார். கல்யாணி இதற்கு உதாரணமாகும்.

உலகஇலக்கியத்தில் பேய் பிசாசுகளைக் கதைப் பொரு ளாகக் கொண்டு நாவல்களும் சிறுகதைகளும் ஏராளமாகப் படைக்கப்பட்டுள்ளன. அந்தப் போக்கைப் பின்பற்றிப் புதுமைப் பித்தன் பயங்கரக்கதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். பிரம்ம ராஷஸ், செவ்வாய் தோஷம், வேதாளம் சொன்ன கதை, காளி கோயில், காஞ்சனை முதலியன இப்படிப்பட்டவை. காஞ்சனை’ புதுமைப்பித்தனின் எழுத்தாற்றலை நன்கு வெளிப்படுத்துகிறது.

புராண, இதிகாச காவியங்களில் இடம் பெற்றுள்ள கதா பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கொண்டு, கால நிலைமைக்கும், எழுதுகிறவரின் மனோதர்மத்துக்கும் புதிய நோக் கிற்கும் ஏற்ப மாற்றியும் திருத்தியும் அழகுபடுத்தியும் எழுதுவது இலக்கியநியதியாக இருந்துவருகிறது. புதுமைப்பித்தனும் இவ்வழியில் பழைய கதைகள் சிலவற்றுக்கு அவருடைய மனோதர்மத்தின்படி புதுவடிவமும் புதுமெருகும் தந்து அற்புதமான கதைகளைப் புனைந்திருக்கிறார். அகல்யை, சாபவிமோசனம், அன்று இரவில்