பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 43 ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. அவருடைய படைப்புத் திறனையும் எழுத்தாற்றலையும் காட்டுகிற நல்ல கதைகள் இவை. புதுமைப்பித்தனின் சிந்தனை வேகத்தை, மனோதர்மத்தை, புதியநோக்கை நன்கு வெளிப்படுத்தும் சிறுகதைகள் பல உள்ளன. அவற்றுள் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் விசேஷமானது. அவருடைய கற்பனைவிசாலம், கேலியும் நையாண்டியும்; வாழ்க்கை நோக்கு, மனிதஇயல்புகள், குழந்தைகளின் உளஇயல்புகள் முதலியன அழகாகவும், ரசித்து மகிழத்தக்க விதத்திலும் இக்கதையில் கலந்து காணப்படுகின்றன.

மகாமசானம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய சிறுகதை ஆகும்.

புதுமைப்பித்தன் கதைகளில் பாத்திர வர்ணனை, சூழ்நிலை விவரிப்பு, உவமைகள் முதலியவற்றிலும் புதுமையை நயமாகக் கையாண்டிருக்கிறார்.

தமிழ்ச்சிறுகதை இலக்கியத்தில் புதுமைப்பித்தன் பெரும் சிறப்புடன் விளங்குவதற்கு அவருடைய சாதனைகள் ஆதார மாகின்றன.

(ஜோதி விநாயகம் நினைவு. சிறுகதைப் பரிசுத் திட்டத்தின் சார்பில் நடந்த புதுமைப்பித்தன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது) 令